பூஜ்ஜியம்
மரங்கள் செத்தால்
மரப் பொருளாகப்
பயன்படுகிறது....
கால்நடைகள் செத்தால்
உணவுப் பொருளாகப்
பயன்படுகிறது...
காட்டு விலங்குகள் செத்தால்
கலைப் பொருளாகப்
பயன்படுகிறது...
பறவைகள் செத்தால்
பிற விலங்கு பறவைகளுக்கு
உணவாகப் பயன்படுகிறது
செடி கொடிகள்
செத்தால் கூட
உரமாகப் பயன்படுகிறது...
மனிதனே!
மனிதனே!
நீ செத்தால்...?