கவி

கடற்கரை மணலில்
காற்று எழுதியது
" கவிதை "

இரவெல்லாம் வெளிச்சம் தந்து விட்டு
பகலில் உறங்க சென்றது
" நிலா "

விடாமல் பொழிந்த மழையால் காலையில்
நேரம் கடந்து எழுந்தது
" கதிரவன் "

இரவில் பாட்டி சொன்ன கதையை
தூங்காமல் கேட்கிறான்
" பேரன் "

வேலை இல்லையென்றாலும் அதிகாலை
சீக்கிரம் எழுந்து விடுகின்றது
" சேவல் "

வேலை இருந்தாலும் சீக்கிரம்
எழ மாட்டான்
" மனிதன் "

யாரிடம் இசை கற்றன தெரியவில்லை
ரம்மியமான குரல்கள்
"குயில்களுக்கு "

பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து
விளையாடி கொண்டு இருக்கிறாள்
பக்கத்துக்கு வீடு
" மழலை "

மழைக்கு ஆகாயம் தந்த அன்பு பரிசு

" வானவில் "

எழுதியவர் : மு.தங்கபாண்டி (1-Dec-17, 3:05 pm)
சேர்த்தது : மு தங்கபாண்டி
Tanglish : kavi
பார்வை : 173

மேலே