தனிமை --- முஹம்மத் ஸர்பான்

கண்ணீரின் முதற்கடிதம்
இரவுகளின் முற்றுப்புள்ளி
இன்னிசையின் அலைகடல்
பாழடைந்த புல்லாங்குழல்
மின்மினியின் நூதனசாலை
மெளனங்களின் நூலகம்
ஓவியங்களின் தாய்மொழி
நாட்குறிப்பின் தேசியகீதம்
பூங்காற்றின் கவிதைகள்
உறக்கங்களின் சிறுகதை
நினைவுகளின் நீதிமன்றம்
கனவுகளின் சிறைச்சாலை
நிமிடங்களின் களஞ்சியம்
சிந்தையின் பள்ளிக்கூடம்
முகவரியில்லா அஞ்சல்கள்
கயிறில்லாத ஊஞ்சல்கள்
ஆயுதமில்லா அமர்க்களம்
ஏக்கங்களின் சமர்ப்பணம்
தனிமையான அருவிகள்
மீன்களோடு வாழ்கிறது
தனிமையான வாழ்வும்
விக்கலோடு முடிகிறது

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (3-Dec-17, 10:19 am)
பார்வை : 238

மேலே