தென்றல் பாகம் 2

என்ன அந்த அதிர்ச்சி தெரியுமா???
அவள் தன் பள்ளியில் பிரிந்த தன்னுடைய ஒன்பது உயிர் தோழிகளையும் ஒருசேர அங்கே காண்கிறாள்,, அவள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சி,, மீண்டும் தான் இழந்த வாழ்க்கை தனக்கு கிடைத்துவிட்டது என எண்ணினாள்..
கல்லூரியில் அந்த மூன்று வருடங்கள் அவளுக்கு ஒரு அனுபவிக்க முடியா பேரின்பத்தை கொடுத்தது ... கல்லூரி நாட்கள் முடிவுக்கு வந்தன,,
அடுத்தது அவள் பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்,, அவள் தங்கை சுப்ரியாவும் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள்,, எனவே தென்றல் தன் திருமணத்திற்கு ஒப்பு கொண்டால்,,
இனிதே திருமணமும் நடைபெற்றது,, ஆனால்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
திருமணம் ஆன ஒரே வாரத்தில் தென்றலை ஏமாற்றக்கூடாதென சந்தோஷ் அதாவது தென்றலின் கணவன் அவளிடம் உண்மையை கூறினான்,
அவன் ஏற்கனவே வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் ., தன் பெற்றோர் அதனை பிடிக்காமல் என்னை உனக்கு திருமணம் செய்துவைத்து விட்டதாகவும் கூறினான்,,, இதில் சோகமும் கவலைப்பட வேண்டிய விஷயமும் என்னவென்றால் அந்த ஒரே வாரத்தில் தென்றல் தன் கணவனாகிய சந்தோஷை மிகவும் காதலித்து விட்டால்,,, ஏனென்றல் சந்தோஷ் ஒரு நல்ல மனிதன், எனவே இந்த செய்தி இவளுக்கு ஒரு பேரதிர்ச்சியை தந்தது,,, ஆனாலும் தான் விரும்பிய தான் கணவனுக்காக தான் உறவினர்கள் எதிர்த்தாலும் அந்த பெண்ணையே திருமண செய்து வைத்துவிட்டு தான் ஒதுங்கி கொண்டாள்..
அவளின் பெற்றோரும் அவள் செய்தது நியாயம் என உணர்ந்து அவளை ஏற்று கொண்டனர்,,, அடுத்தது அவள் தான் வாழ்க்கையில் ஏற்று கொண்டது அவளுக்கான ஒரு வேலை ,,
ஒரு பள்ளியில் அதாவது அவள் படித்த பள்ளியிலேயே அவளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் வேலை கிடைத்தது,,
மகிழ்ச்சியுடன் அவள் அதை ஏற்று கொண்டாள்,, இரண்டே ஆண்டில் பதவி உயர்வு பெற்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் அளவிற்கு உயர்ந்தால்,,
அங்கே அவள் சந்தித்த இரண்டாம் ஆண் தமிழ் ராஜ் .. அவன் ஒரு இயற்பியல் ஆசிரியர், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவன் ஒரு உண்மையான மனிதன் அழகான அறிவான மனிதனும் கூட,,
இருவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை, தமிழ் இவளை பார்த்த உடனே இவள் அழகில் மயங்கி இவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணினான்,,,,
அனால் அவளிடம் இதை தெரிவிக்க வில்லை,,, இருவரும் பாடம் எடுக்க சென்ற வகுப்புதான் அந்த பள்ளியிலேயே மிக வாலுத்தனமான வகுப்பு ,, அந்த வகுப்பிற்கு சென்ற ஆசிரியர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் அவ்வகுப்பில் நிலைத்தது இல்லை,, அவ்வளவு மோசம் அந்த வகுப்பு, ஏழு பெண்கள், நாற்பத்துமூன்று ஆண்களை கொண்டது அந்த வகுப்பு,,
முதல் நாள் வகுப்பில் தென்றலும் சரி , தமிழும் சரி அவ்வகுப்பில் பாடம் எடுக்க சிரமப்பட்டனர்,, அவ்வாறு நடந்து கொண்டனர் அவ்வகுப்பு மாணவ மாணவிகள்..
அனால் நாளடைவில் தென்றலும் , தமிழும் அம்மாணவர்களை மாற்றி விட்டனர் என்றுதன் சொல்ல வேண்டும்,, தென்றல் என்ன சொல்கிறாளோ அது நடக்கும் என்பது அம்மாணவர்களின் கருத்து,,, நாற்பத்துமூன்று மாணவர்களில் ஐந்து பேர் மட்டும் தென்றலுக்கு மிக நெருக்கம் ,, அவளை மம்மி என்றுதான் அழைப்பார்கள்,, அவ்வளவு மாற்றி விட்டாள் தென்றல்,,
அவர்களும் பள்ளி படிப்பை முடித்து வெளியேறினார்கள், தென்றலும் அப்பள்ளியை விட்டு வந்து சொந்தமாக ஒரு பள்ளியை ஆரம்பித்தாள்,, அதற்கு ஜெம்ஸ்போர்ட் என பெயரிட்டாள்,
தென்றலின் அறிவும் தமிழின் ஆட்சிமுறையும் ஒன்று சேர்ந்து அப்பள்ளியை வெகு சீக்கிரத்தில் முன்னேற்றிவிட்டது,, இப்போது அந்த பள்ளியை பற்றி தெரியாதவர்கள் யாருமே இல்லை,,,
இந்நிலையில் தென்றல் குடும்பத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது,, அவளின் பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டனர்,, அவளின் தங்கை கல்லூரி படிப்பை முடித்து விட்டு அவளுடன் பள்ளியில் பணியாற்ற இணைந்து கொண்டாள்
இப்போது பழகி ஆறு வருடங்கள் கழித்து முதல் முறையாக தமிழ் தென்றலிடம் தனது திருமண விருப்பத்தை தெரிவிக்கிறான் ,, அப்போது தென்றல் அவனிடம் தனது திருமண கதைகளை எடுத்து கூறி தான் தான் கணவனை நேசித்து விட்டதாகவும் , இனி வேறு ஒரு ஆணை தன்மனத்தால் நினைக்க முடியாது என கூறினாள்...
தென்றலின் சோகத்தை கேட்ட தமிழ் அவளின் மனவலிமையை பற்றி ஆச்சர்யப்படுகிறான்,,,தன்னிடமும் தென்றலிடமும் பயின்று இன்றளவும் தங்களோடு இணைப்பில் உள்ள அந்த ஐந்து பொறியியல் மாணவர்களிடமும் இதை பகிர்ந்து கொள்கிறான்,, அந்த ஐவரும் தென்றலின் மீது அளவு கடந்த பாசம்வைத்தவர்கள் ,, அந்த ஐவரில் இருவர் அதாவது அஜய், பாலு இருவரும் தென்றலுக்கு ஒன்றென்றால் தாங்க முடியாதவர்கள்,, அவர்களும் இதை கேட்டு அதிர்ந்து போனார்கள்,
பிறகு தென்றலின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ் தென்றலின் தங்கை சுப்ரியாவை மணந்து கொள்கிறார்,,இவர்களின் வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருந்த நிலையில் ,, தென்றல் தொண்டை புற்று நோயால் பாதிக்க படுகிறாள்,,
அவளின் இறுதி பதினைந்து நிமிடம் அவளுக்கு உலகமான ஏழு பேரில் ஆறு பேர் மட்டுமே தன் அருகே இருப்பதை உணர்கிறாள்,, உடனே தமிழ் தென்றலின் வேதனை மிகுந்த அழுகையை தாங்க முடியாமல் வாசலில் நிற்கும் பாலுவை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து வருகிறான்,, இறுதியில் ஒரு குறும் சிரிப்புடன் தென்றல் மண்ணுலக வாழ்வை துறக்கிறாள்,,
இப்போது சுப்ரியா பள்ளி நிர்வாகத்தை கவனித்து கொள்கிறாள்,, தமிழ் தாளாளராக உள்ளான்
இப்போது புரிந்து இருக்குமே அந்த பள்ளி யாருடையது ,, அங்கே வந்த அந்த ஐந்து பொறியியல் வல்லுநர்கள் யார்,, அவர்கள் பார்த்து வருத்தப்பட்ட ஓவியம் யாருடையதென்று,,,
ஆம்,, பள்ளி தென்றல் ஆரம்பித்ததுதான் ,, ஐந்து பேரும் தென்றலின் மாணவர்கள்தான், அந்த ஓவியம் தென்றலுடையதுதான் ,,,
அனைவரும் விழா முடிந்து வீட்டிற்கு செல்கிறார்கள் ,, வீட்டில் சுப்ரியாவின் குழந்தை என்ற பெயரில் மீண்டும் பிறந்திருக்கும் தென்றலை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள்,,,
பள்ளியின் பெயரில் கூட தன் தோழிகளை நினைவுபடுத்தி இருக்கிறாள் தென்றல் ,, அதாவது அவள் உயிர் தோழிகள் ஒன்பதுபேர் ஒன்பது என்றால் தமிழில் நவ என்று பொருள் , அதுவே ஆங்கிலத்தில் ஜெம்ஸ்,, போர்ட் என்றால் கோட்டை, ஜெம்ஸ்போர்ட் என்பதில் கூட தன் தோழிகளை நினைவுபடுத்தி உள்ளாள் அந்த தன்னலமற்ற தென்றல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


இந்த நாவல் என் ஆங்கில ஆசிரியரின் வெளியிடப்படாத நாவல்,,,,

எழுதியவர் : என் ஆசிரியர்,, (3-Dec-17, 2:49 pm)
பார்வை : 234

மேலே