நீ அணுப்பிய காதல்

விடிந்தும் விழிக்காத நான்
விடியும் முன்னமே விழிக்கிறேன்!ஆம்
இந்த காதல் உயிர்த்தெழுகிறது.

யாரும் அறியாதவாறு இதயத்தை மறைத்து வைத்தாலும் அதனைக்
கண்டுபிடித்து உள்ளே
நுழைந்து என்னை
உயிரற்றவனாக கிடக்கச்
செய்வதில் ஆனந்தம் கொள்கிறாய்!

நிகழாத மாற்றத்தை
நிகழ்ந்ததாகவும்
நிகழ்ந்த மாற்றத்தை
நிகழாததாகவும் நினைக்க
செய்யும் இந்த காதலை
என்ன செய்ய!

நடக்க பிடிக்கும் என்னை
ஓடச்செய்வதும் ஓடும்
என்னை பறக்கச் சொல்வதும்
பறந்து கொண்டிருக்கையில்
ஓரிடத்திலேயே
இருந்திடச் செய்வதுமாக
பாடாய்ப் படுத்துகிற
இந்தக்காதலை
என்ன செய்ய!

எந்தப் பாதையில்
அவள் பயணிக்கிறாளோ அதில்
பயணிக்க சொல்வதும்
எப்பானத்தை அவள்
அருந்துகிறாளோ அதனையே
அருந்த வைப்பதுமாய்
தன் வேலையை செவ்வனே
செய்கிறது இந்தக் காதல்!

உண்ணாது உறங்காது
யாரோடும் உறவாடாது
தனிமையில் இருப்பதும்
தன்னந்தனியாய் பேசியும் மலைபோல்குவிந்த
வேலையையும் தீண்டாது
உன்னையே நினைக்கச்
சொல்வதும் என்னுயிரிலே
உன்னுயிரை கலந்திட ச்
செய்வதுமாய் இருக்கிறது
நீ அணுப்பிய இந்த காதல்!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (5-Dec-17, 10:34 am)
பார்வை : 481

மேலே