தூது
தூது
செந்தாமரை மலா் போன்ற மென்மையான மனம் கொண்ட என் தாய்க்கு
கடல் கடந்த நாட்டில் பௌா்ணமி வெளிச்சத்தில்
நான் எழுதும் கடிதம்
மலா்கின்ற பூமியில் தினம் மனம்தேடும் முதல் இடம் நீயே தாயே
உன் கையால் தினம் இளங்காலையில் கிடைக்கும்
தேநீரை பருக என் மனமிங்கு ஏங்குகின்றதே தாயே
என் குறும்புகளின் முடிவில்
உன் அன்பான கோபங்கள் கண்டிட விழிகள் தவிக்கின்றதே தாயே
தேநிலாவின் வருகையில் நீ ஊட்டும்
உன்னுடைய அறுசுவையான உணவினை உண்டிட ஏங்குகின்றன் தாயே
தென்றல் குளிரோடு நீ கூறும் கதை கேட்டு
உன் மடிமீது விழிமூட ஏங்குகின்றேன் தாயே
- சஜூ