கல்லறை முரண்

மலர்ந்த மலர்கள்
மடிந்த மனிதர்கள்
கல்லறை தோட்டம்

நறுமண பூக்கள்
நாற்ற மேனிகள்
கல்லறை கோட்டை

கண்ணீர் மழைகள்
நனையாத நபர்கள்
கல்லறை குடைகள்

ஆலமர விழுதுகள்
ஆடாத விரல்கள்
கல்லறை ஊஞ்சல்

சிகப்பு மண்ணுகள்
துளிர்க்காத மம்மிகள்
கல்லறை குகைகள்

இது
கல்லறை ........ முயலாதவர்களின் முரண்

எழுதியவர் : க. ராஜசேகர் (7-Dec-17, 5:21 am)
Tanglish : kallarai muran
பார்வை : 584

மேலே