எனக்குள் வந்த காதலே💓💓💓

மூன்றெழுத்து வார்த்தை இது,
முதல் முறை உணர்ந்தேனே!
முப்பொழுது நேரங்களையும்,
முழுதாய் நான் மறந்தேனே!

யாரிடமும் சொன்னதில்லை,
என் மனதின் முகவரியை!
காதல் என்னை கண்டுபிடித்து,
கடிதம் தந்து போகிறதே!

எனக்குள் மாற்றங்கள்,
எத்தனையோ நடக்கிறதே!
இதயமும் இடம் மாறி,
இயங்கி கொண்டு இருக்கிறதே!

மழையில் நனையும்படி,
மனது கூட துடிக்கிறதே.
காற்றோடு பறக்கும்படி,
கால்களும் ஏங்குகிறதே.

உணவு உண்ணக் கூட,
உடல் இங்கே மறுக்கிறதே.
உறக்கத்தை மறந்திடவே,
விழிகளும் விரும்புகிறதே.

சொர்க்கத்தை இதுவரை நான்,
ஒரு சொல்லாக கேட்டதுண்டு.
காதல் வந்த பின்னே,
கண் முன்னால் காண்கிறேனே.

முன்னறிவிப்பு இல்லாமல்,
மூச்சுக்குள் நுழைந்த காதலே,
என் முழு உயிரும் உன்னைத்தான்,
இனி மூன்று நேரமும் சுவாசிக்குமே!

எழுதியவர் : தங்க பாண்டியன் (7-Dec-17, 5:42 pm)
பார்வை : 144
மேலே