காதல்

பூமியின் காதல் கடிதம் வானுக்கு...........
வானம் அவனாக........
பூமி அவளாக............
நீ விடும் கண்ணீர்துளிகளை
நான் ஏந்திக்கொள்ள..!
இடையில் ஏதும் வேண்டாம்
வளிமண்டலம் ஒன்றே போதும்
நீ விடும் மூச்சுக்காற்றை நானும்
நான்விடும் மூச்சுக்காற்றை நீயும் சுவாசிப்பதற்கு......!
இப்படியே இருந்து விடட்டும்
ஈருயிரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி...
நீ இல்லையெனில் நான் இல்லை
நான் இல்லையெனில் நீ இல்லை
நாம் இருவரும் இல்லையெனில்
இவ்வுலகமேயில்லை .....
நாம் கைகள் கோர்க்கும் தொலைவில்
இல்லையென்றாலும் முகம் பார்க்கும்
தொலைவிலாவது இருக்கிறோமே ....
ஒரு நாள் இருவரும் ஒன்றாவோம்
அப்போது இந்த உலகமே முடிந்துபோகும்...........
தொலைக்காட்சில் முடியும்
திரைப்படங்களை போல் .....

எழுதியவர் : reshma (7-Dec-17, 7:45 pm)
Tanglish : kaadhal
பார்வை : 188

மேலே