தேஹ உறுப்பு சொல்லும் சங்கதி,,,

அப்பான்றது - மூளை மாறி
ஏன்னா சிந்திக்கவும் செயல்
பட வைக்கிறதும்
மூளை தான......

அம்மான்றது - கண்ணீர் போல
நமக்கு எதாவது ஒன்னுன்னா
கண் கலங்கறது
அம்மா தான......

க்ரஷ்ன்றது - பரு மாறி
வர வேண்டிய வயசுல
வந்தே தீரும்.....

காதல்ன்றது - மூச்சுக்
காத்து போல
பாக்க முடியாது
உணரத்தான் முடியும்......
மனைவின்றது - எலும்பு மாறி
எல்லா உறுப்புகளையும்
இணைப்பது போல்
எல்லா உறவுகளையம்
இணைக்கிறதே........

சொந்தம்ங்கிறது - தாடி மாறி
ஒரு சிலருக்கு
பிடிக்கும்
ஒரு சிலருக்கு
பிடிக்காது .......

குழந்தைன்றது - உதடு மாறி
எவ்வளவு கவலை
வந்தாலும்
நம்மை சிரிக்க
வைத்து விடும் ........

சொந்தம்ங்கிறது - வயித்தில இருக்கிற
உணவ போல
நம்ம நல்லாருந்தம்னா
ஒரு சிலருக்கு
செரிக்கவே செரிக்காது.....

நண்பன்றது - ரத்தம் மாறி
நமக்கு எங்க அடிபட்டுச்சுனாலும்
முதல வரது என்னவோ
இரத்தம் தான..........
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (8-Dec-17, 8:52 pm)
பார்வை : 65

மேலே