காலம் கதை செல்லும்

சயலறையில் அவள் உதடுகள்
முணுமுணுத்த வார்த்தைகளுக்கு..
வரவேற்பு அறையில்
கணத்த சத்ததுடன் தொலைக்காட்சி
பார்த்துக் கொண்டிருந்த
அவன் காதுகளில் நுழைந்தது..
தொலையியக்கியில் அனைக்கப்பட்டு,
செய்தி அறிக்கை சற்றே ஓய்வெடுத்தது..
சங்கடமும் சம்மந்தமும் இல்லாத
அவனின் வார்த்தை கூற்றுகள்
அவள் நாபிக்கமலத்தில் உருண்டு திரண்ட
ஆக்ரோச வார்த்தைகள் ஈடு செய்தன..
கம்ப இராமாயணத்தில்
இராமனும்..
இராவணும்..
போர் பூண்டது போல் அவலம் நிலவியது..
ஜோ! என்று ஓய்ந்த மழைப் போல அவன்
வார்த்தைகளுக்கு முற்றுப் புள்ளியாக
அவள் கண்ணீர் துளிகள் கரை கடந்தன..
சலிப்பும் சஞ்சலத்துடனும் விடைப் பெற்றான் அவன்..
சிந்தனை சிதைந்து விடை பெறாமல்
அவள்..

கடிகாரத்தில் காலம் கடந்தது..

வீட்டின் அழைப்பு மணி பீறிட்டு அடித்தது..
சமயலறையில் அழுதுக் கொண்டிருந்த அவளும்..
சாய்விருக்கையில் அமைதியாக இருந்த அவனும்..
புதிய அத்யாயத்திற்கு தயாரானார்கள்..
"அப்பா..நான் வந்துட்டேன்!"
"அம்மா..நீ எங்க இருக்க?"
மழலை குரல் மாறாமல் அழைத்த மகளை
அனைத்தப் படி..அவன்
"தங்கம் சமயல் ரும்ல இன்னும் என்ன செய்யஞ்சிட்டு இருக்க..வாமா சீக்கிரம் ரெடியாகு கடைக்குப் பேய் உன் அப்பா அம்மா வெட்டிங் டேக்கு கிஃப்ட் வாங்கலாம்!"
அவளோ, புதிதாய்ப் பூத்த மலர் போல்..
ஒப்பனை இல்லாத கண்களில் சிரித்தபடி
"இதே கிளம்பிடேன்.." என்றால்..
மறுநாள் அலுவலகத்திற்கு கிளம்பும் முன்
அவள் முகம் பார்த்து "என்ன மன்னிச்சிரு" என்று உதடுகள் உருக்கமாய் பிதற்றியது..
விழிகள் நிரம்பிய காதலுடன் "ம்ம்ம்" என்றால்..

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (9-Dec-17, 12:29 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 360

மேலே