அனாதை குழந்தைகளுக்கு நூலகம் அமைக்கும் சென்னை பெண்கள்

சென்னையை சேர்ந்த இரு பெண்கள் ஏழை குழந்தைகளுக்காக நூலகம் கட்ட வித்யாசமான முறையில் நிதி திரட்டி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த நிமிஷா பிலிப் மற்றும் வர்சிஷ்ட ரவிசந்தர நாதன் சில ஆண்டுகளுக்கு முன்பு டி.எஸ்.டபிள்யூ என்ற திட்டத்தை தொடங்கினர். இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள கபேகளில் (coffee shop) புத்தகங்கள் வைக்கப்படும். வாடிக்கையாளர்கள் மேஜையில் இந்த புத்தகங்கள் இருக்கும். அந்த புத்தகங்களை திறக்கும்போது அதில சிறிய குறிப்பு கொண்ட துண்டு சீட்டு இருக்கும். இந்த சீட்டில் அவர்களின் திட்டத்தை பற்றிய விவரங்கள் எழுதப்பட்டிருக்கும்.

இந்த புத்தகத்தை எடுக்கும் வாடிக்கையாளர் அதற்கு பணம் கொடுக்க நினைத்தால் கொடுக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை சென்னையில் இருக்கும் 10 அனாதை இல்லங்களில் நூலகம் கட்ட பயன்படுத்தப்படும் .
இந்த முயற்சியை வருகின்ற டிசம்பர் 25 தேதி ஆரம்பிக்க போவதாக கூறியுள்ளனர். மொத்தம் 1,000 புத்தகங்களை விற்பனை செய்ய இவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

எழுதியவர் : (9-Dec-17, 2:59 pm)
பார்வை : 56

மேலே