தூக்கை நோக்கி ஓர் பயணம்

தன் ரத்தத்தை பாலாக தந்தவள்
தாய் என்றால்,
தன் ரத்தத்தை நித்தமும் உணவாக தருபவன்
அவனுக்கு என்ன பெயர் ?

ஊருக்கே சோறு போட்டு குளிரவைத்து,
தன் வயிறை கூறு போட்டு காயவைப்பவன்
அவனுக்கு என்ன பெயர் ?

பூமியிலோ வறட்சி !
விவசாயத்தில் ஒரு புரட்சி !
பட்ட கடனுக்கு ,
தன் துணைவியின் தாலி வைத்து
தன் உடலை தாழிக்குள் வைப்பவன்
அவனுக்கு என்ன பெயர் ?

என்னை பொறுத்தவரையில்
கண்ணில் காணும் "கடவுள்"

இதை கண்ணில் கண்ட
சாட்சி என்னிடம் உள்ளது,
நாம் உண்ணும் சாதத்தின்
ஒரு பருக்கை

மழை இல்லாமை,
அவன் உழைப்புக்கு போதிய
விலை இல்லாமை,
"தூக்கு" கயிற்றிடம்
விலை பேசினான்

நாமோ !
உழுதவன் மனச உழுதாச்சு,
விதைத்தவன் மனச வித்தாச்சு,
அவன் மனமோ பித்தாச்சு,
விளைநிலமும் பாத்தாச்சு,
மனிதனின் ஆயுள் முத்தியாச்சு........

விவசாயத்தை காப்போம்........

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (9-Dec-17, 4:04 pm)
பார்வை : 518

மேலே