எப்படி மனம் துணிந்ததோ சுவாமி - உசேனி

இன்று 'ராகப்ரியா' வில் மதுரை ஃபார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் விவேக் சதாசிவம் என்ற இளம் பாடகர் பாடிய ஒரு இனிமையான பாடல் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான அருணாசலக் கவிராயர் உசேனி ராகத்தில் இயற்றிய எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி! என்ற பாடல்.

இப்பாடலை அநேக வித்வான்களும், விதூஷிகளும் பாம்பே ஜெயஸ்ரீ உட்பட பாடியிருக்கிறார்கள். பாடல் கீழே!

பல்லவி:

எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி!
எப்படி மனம் துணிந்ததோ, சுவாமி?
வனம் போய் வருகிறேன் என்றால்
இதை ஏற்குமோ பூமி? (எப்படி)

அனுபல்லவி:

எப்பிறப்பிலும் பிரியேன், விடேன் என்று கைதொட்டீரே..(2)
ஏழையான சீதையை நட்டாற்றில் விட்டீரே…(2)

சரணம்:

கரும்பு வில் முறித்தாற் போலே தள்ள லாச்சுதோ?

ஒரு நாளும் பிரியேன் என்று
சொன்ன சொல்லும் போச்சுதோ? (2)

வருந்தி வருந்தி தேவரீர் மெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல (2)

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ? என்னை விட்டுப்
பிரிகிறேன் என்று சொல்ல (எப்படி மனம் துணிந்ததோ)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-17, 10:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

மேலே