தாய் தமிழுடன் கலந்து உருவான ‘’அம்மா’’ வார்த்தை

தமிழில் 'அம்மா' என்னும் எழுத்து எப்போது,எப்படி உருவானது என்பது பலருக்கும் தெரியாது.

அம்மா என்ற வார்த்தை எந்த மொழியானாலும் அந்த மொழிக்கு மட்டும் இல்லை, நமக்கும் உயிர் கொடுக்கும் வார்த்தை. தமிழில் அந்த வார்த்தைக்கு அதிக சிறப்பு, மதிப்பு, மரியாதை உண்டு. அனைத்து ஜீவ சக்திகளையும் அந்த வார்த்தை உள் கொண்டுள்ளது.

அம்மா என்பதில் இருக்கும் 'அ' என்னும் உயிர் எழுத்தையும், உயிர் வளர மெய் (உடல்) தேவை என்பதால் 'ம்' மெய் எழுத்தையும், 10 மாதம் கழித்து உடல் உயிராக உலவவிடுவதால் 'மா' எனும் உயிர் மெய் எழுத்தையும் சேர்த்தே அம்மா என்று வைத்துள்ளனர்.

அம்மா என்ற எழுத்தும் தாய் தமிழுடன் கலந்தே உயிர் அளித்துள்ளது. உயிரும், மெய்யும் இணைந்ததுதான் உயிர் மெய் எழுத்து. அதுதான் அம்மா. உயிருமாக, மெய்யுமாக நம்முடன் கலந்து நமக்கு உயிர் அளித்தவர். வல்லின, மெல்லின எழுத்துக்களும் அம்மா, அப்பா என்ற பெயரை வேறுபடுத்தியும் காட்டுகின்றன.

அம்மா மென்மையானவர். அப்பா வன்மையானவர். ஆதலால் அம்மாவுக்கு மெல்லினத்தில் வரும் ‘’ம்’’ என்ற எழுத்தும், அப்பாவுக்கு வல்லினத்தில் வரும் ‘’ப்’’ என்ற எழுத்தும் சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து தமிழ் எந்தளவிற்கு அறிவுடன், ஆழத்துடன், சிந்தனையுடன் செதுக்கப்பட்டுள்ளது என்பது புரியும்.

TOI Contributor

எழுதியவர் : (10-Dec-17, 6:23 am)
பார்வை : 116

சிறந்த கட்டுரைகள்

மேலே