கூடலும் ஊடலும் தேடலின் விருப்பம்

முப்பாலில் முடிசூடியவள் மூன்றாம்பாலில் குடியேறிவிட
மூச்சுக்காற்றில் மூட்டியதீயினை ஆற்றிடயெண்ணித்தான் தாழடைத்தாளோ...!

இதழசைவில் மடல்விரிய உருகியசுனை இடறிவந்து குடியேற
கார்பொழுதில் கரிக்கோலும் காகிதத்தோடே நயமோடுதோதாய் கவிவரைய...

துளிவியர்வை நாசிநுனி பூத்துச்சிதறும் புலம்பெயரா புதுக்கவிதை அவளானால்
துளிர்படர பாசிவிளைய காத்துநின்றே இளகவைக்கும் மதுக்குவளை நானாவேன்...

கிளைபடர்ந்த நரம்புகளெல்லாம் கொதிக்குருதி வேகம்காணும் வேட்டைமுடிந்து வேடம்கலைத்தால்
துளையடைந்த கருவண்டாகி மதிமறந்து மயக்கம்காணும் நயமுரைத்து ஊடல்கொண்டால்...

புறவழகே புதைந்தகனி புயல்சிக்கிய இலவம்பஞ்சாய் இயல்மாறும் பதம்மாறா
கறவாப்பால் கசிவதில்லை கசப்பதில்லை புசித்தநானும் மசித்துபருக பசித்திடவியலுமோ...!

சுமைதாங்கி சுடர்விடுமே கூச்சலிட்டு அச்சுறுத்தி அங்கமெல்லாம் ஆட்கொண்டால்
இமைநான்கில் தொடர்ந்திடுமே காதல்மட்டும் வன்மொழியில் இனிமையாகி வலிமைகொண்டதனால்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (10-Dec-17, 7:51 am)
பார்வை : 76

மேலே