அவள் விதவை ஆனாள்

விளக்குத் திரி வெளிச்சம் தர
விடியல் குச்சி விரையமாகுது. - அது தீப்பொறித் தந்ததும்
வேண்டாதவனாய் ஆகுது.
அவளது கன்னிப் பருவம் மாறிட - திருமண
காதல் பருவம் மாலையிட - சீதனமாய்
கற்பு அங்கே விலையாகுது
கணவன் அன்பில் நிலையாகுது.
விளக்குத் திரி போல் வாழ்வில்
வளர்ந்தவள் - இல்லற
வாழ்வின் வெளிச்சத்தில் - கண்ணியமாய்
விருந்தாக வைத்தாள் தன் கற்பை.
தீப்பொறியில் கருகிய திரியனவே
தீஞ்சிப் போனாள் - தனித்து நின்றாள்.- அவளுக்கு
மாலை சூடியவன் - தனக்கு
மாலை சூடிக்கொண்டு மரணித்துவிட்டான் - அவள்
விதவை ஆகுமுன் ஒரு பூவுக்கு அன்னை ஆனாள்.
பருவக்கொடி பாவையும்,
படர்ந்துப் பூத்த இளம் பூவும் - தனி மரமாய்
ஒற்றை விளக்காய் அணையாமல்
ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது.- அவள் நிலவு முகத்தில்
பொட்டை இழந்தாலும், - கார்மேகக் கூந்தலில்
பூவை இழந்தாலும் - பாரதி கண்ட
புதுமை பெண்ணாய் பவனி வருகின்றாள்.
பதுமை அவள் பதுங்கவில்லை - நெஞ்சில்
பதுங்கியுள்ள துணிவை தட்டி எழுப்பினாள்
பாருக்குள் தனக்கும் - ஒரு
புது வாழ்வை உருவாக்கி கொண்டாள் - அதில் இளம்
பூவும் வாசம் வீச மலரக் கண்டாள். - பாரதி கண்ட
பெண்ணே நீ வாழ்க. - உன்னால்
பெண்ணினமும் வளர்க. - நீ
விதவை அல்ல - பெண்ணினத்தின்
விடியல் - உன் விடியலில் - பல
விதவைகளின் விலாசங்கள் அடங்கி உள்ளது.

எழுதியவர் : சங்கு chandramoulee (11-Dec-17, 8:06 pm)
பார்வை : 70

மேலே