கற்பனை கவிதையல்ல
தேர்தல்யின்றி பதவி பிரமாணம்
அமெரிக்க அதிபர் நான்
வெள்ளை மாளிகையாக
நீ...
மந்திரமில்ல மன வழிபாடு
காதல் கடவுளாக நான்
நெஞ்சலாயமாக
நீ.......
விதைக்காத பூஞ்சோலை
உதடுகளின் புன்னகையாக நான்
சந்தோச நினைவாக
நீ......
வார்த்தையின்றி இதயராகம்
வாசிக்கும் இளையராஜா நான்
சங்கீத ஸ்வரங்கள்
நீ.....
என்னை வெறுமையாக்கி
நீ எனக்குள் வசிக்கிறாய்
வெவ்வேறு விதமாய்
என்னை செதுக்கிறாய்
செல்லமே!
இது கற்பனை கவிதையல்ல
என் காதல் மனம்