ஊமைப் புல்லாங்குழல்

இளமையின் யமுனையைப்
பெருமூச்சுகளால் ரசித்தவன்
ராதைகளுக்குக் கேட்காத
ஊமைப் புல்லாங்குழல் இசைத்தவன்
சிறகுகளைத் தோள்களாக்கி
உறவுகளைச் சுமந்தவன்,
கனவுகளைக் கிள்ளிக் கிள்ளி
இரவுகளில் எறிந்தவன் ,
காதல் என்ற கவிதையைக்
கண்ணுக்குள்ளேயே மறைத்தவன்,
நைந்த நினைவுகளை
நெஞ்சிலேயே கரைத்தவன்,
இல்லாத நாட்களுக்குள்
அந்நியன் போல் நடந்தவன்,
சொல்லாத சோகங்களின்
சுகம் ததும்பி வடிந்தவன்,,

வாழ்க்கையின் பூக்கள் மீது
உலர்ந்த புன்னகைகளைப்
பகிர்பவன் ...
மல்லிகைப்பூ வீதிகளில் மட்டும்
மனம் மல்கிப் போய்விடுகிறான்
இந்த முதிர்கண்ணன் !...

*
கவித்தாசபாபதி
*
A verse to an unmarried middle age பிரிஎந்து

மீள் -

எழுதியவர் : கவித்தாசபாபதி (13-Dec-17, 4:27 pm)
பார்வை : 87

மேலே