பனித்துளியும் பருவப்பெண்ணும்

புல்வெளியில் நுரைத்தபனி அருகம்புற்களை படர்ந்துநிறைக்க
பல்சுவை கண்டவண்டு இசைகொண்டு சலனமிட...
பருக்களாய்மாறிய பனித்துளியும் பயந்தவண்ணம் இளகிப்போக
பருவப்புற்கள் பூப்படைந்ததென பறைகொட்டியது புற்றீசல்கள்...
புருவமுயர்த்தி விரைந்தமுயல் அரவம்போல் உருமாறிவிட
பெருகிவிட்ட கதிரொளியில் நனைந்துநிற்கும் தீராமோகம்...
தென்னங்கீற்றில் சொட்டும்துளி தென்றல்வசம் காதல்மொழியும்
அன்னப்பறவையும் எட்டிப்பார்க்கும் அன்றுமட்டுமல்ல நாளும்தொடரும்...
மலட்டுமேதை வரைந்தகலை இருட்டறையில் மறைந்தகதை
அலறும்ஆந்தை விரைத்தநிலை குருடர்காண விளைந்தவிதை...
இதழ்திறவா தாரகைசொற்கள் இமைபேசும் மன்னனிடம்
இதனிடையே நாரதன்நுழைய எமைதூற்றும் பாரதிமண்ணே...!