இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி

இது தான் இந்தியா



இந்திய ஜீவனைத் துடிக்க வைக்கும் ஏழை – ஹிந்துப் படகோட்டி!

ச.நாகராஜன்

1



கல்கத்தாவில் உள்ள ஹிந்து ஸ்கூலின் ஆக்டிங் ஹெட்மாஸ்டரான “வித்யா வைபவ்”, ஸ்ரீ அபானி ரஞ்சன் சென்குப்தா, இரண்டு தொகுதி அடங்கிய ஒரு புத்தகத்தை வங்க மொழியில் தொகுத்துள்ளார் – ஹிந்துக்களின் புகழோங்கிய பெருமையை விளக்கும் நூல் இது!

அவர் 1942இல் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைத் தொகுப்பில் விவரிக்கிறார். அது இது தான்:



பிரயாகையிலிருந்து ஒரு கனவான் எழுதுகிறார்:

“கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்மணிகளுடன் அமாவாசை புண்ய காலத்தன்று புனித ஸ்நானத்தை செய்வதற்காக நான் ஒரு படகை (க்விலா அல்லது கோட்டை எனப்படும்) கெல்லா காட்டிலிருந்து வாடகைக்கு எடுத்தேன்.



படகோட்டியின் பெயர் மோதிலால்.





கனவான்: மோதிலால், காலையிலிருந்து நீ எவ்வளவு சம்பாதித்தாய்?



மோதிலால்:- “ஐயா. ஒரு கனவான் சில பெண்மணிகளுடன் என் படகை வாடகைக்கு எடுத்தார். 10 ரூ என்று ஒத்துக் கொண்டோம். சங்கமம் ஆகும் இடத்தில் மொட்டை அடிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.”நாங்கள் வர லேட்டாகும். அதற்குள் மற்ற யாரையாவது அழைத்துக் கொண்டு போ” என்றார்கள். எட்டு ரூபாய்க்கு இன்னொருவரை அழைத்துச் சென்றேன். ஆனால் வருகிறேன் என்று சொன்ன அந்தக் கனவான் திரும்பவே இல்லை.பின்னர் தான் நீங்கள் வந்தீர்கள்.”



கனவான்: என்ன? அந்த ஆள் உன்னை ஒரு புனிதமான நாளில் ஏமாற்றி விட்டானா?



மோதிலால்:- என்னை அவன் ஏமாற்றியிருக்கலாம்.அது என் தலை விதி. அவனை போன ஜன்மத்தில் நான் ஏமாற்றி இருந்திருப்பேன். அல்லது இன்னொருவனை ஏமாற்றியிருந்திருப்பேன். எனது கெட்ட செயலுக்காக இப்போது அனுபவிக்கிறேன். யாரை நான் குறை கூற முடியும்?



கனவான்: மோதிலால், நீ நல்ல மனதைக் கொண்டவன். உன் கதையைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.







மோதிலால்: ஐயா, நான் கங்கா, யமுனா மாதாவின் குழந்தை. அவர்களால் தான் என் ஜீவிதமே நடக்கிறது. அவர்களே எனக்கு நல்ல சிந்தனையைத் தருகின்றனர்; சம்பாத்தியத்தையும் தருகின்றனர்.



கனவான்: ஆஹா! அற்புதம்!



மோதிலால்: ஒரு முறை என் மனைவி ஒரு ஆபரணம் வேண்டுமென்றாள். நான் யமுனை மாதாவைக் கேட்டேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு பிரபு என் படகை ஐந்து ரூபாய் வாடகைக்கு எடுத்தார். அதை வைத்து ஒரு ஆபரணத்தை வாங்கி என் மனைவியிடம் சொன்னேன் -“ யமுனை அம்மா இதை உனக்குப் பரிசாகத் தந்திருக்கிறாள். நமது முன்னோர்கள் பிரபு ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி, சீதம்மா மற்றும் லக்ஷ்மணன் ஆகியோரை சித்ரகூடத்தை நோக்கி அவர்கள் வருகையில் உதவி புரிந்திருக்கின்றனர். அதனால் எனக்குக் கொஞ்சம் புண்ணியம் சேர்ந்திருக்க வேண்டும்.”



அந்தக் கனவான் மோதிலாலுக்கு நிறைய பணத்தைப் பரிசாக அளித்து விட்டுச் சொன்னார்:” நீ ரொம்ப நல்லவன். கங்கா மாதா, யமுனா மாதாவின் அருளும் அதே போல மிகவும் அற்புதமாக இருக்கிறது!”



இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காண்லாம். இது ஆங்கில வார இதழான Truth இல் 1-12-17 (தொகுதி 85; இதழ் 30) தேதியிட்ட இதழில் வெளி வந்துள்ளது.

நன்றி: Truth





2



Noble Righteous Hindus: Righteous Thinking





Vidya Vaibhav, Shri Abani Ranjan Sengupta, Acting Head Master, Hindu School, Calcutta compiled a book (two Volumes) in Bengali– Hindu Suhrid focusing on Hindu Glory.





He quotes a report of an incident that happened in 1942. A gentleman from Prayag writes – “I hired a country boat from Kella (Fort or Quila) Ghat for bathing in Triveni Sangam with few of ladies from my family during New Moon day of Kumbha Mela. The boatman’s name was Motilal”.





Gentleman – Motilal, How much did you earn since morning?



Motilal – “Sir, in morning one gentleman along with few ladies hired me. We agreed on Rs10. They went to perform the head tonsure ceremony at the sangam and told me. ‘We shall be late. You can make business with other persons meanwhile’. I secured Rs 8 with another party but could not find the gentleman out there on return. Then you came.”





Gentleman – What? That person cheated you on such an auspicious day?



Motilal– He could cheat me because it was my fate. I might have cheated him or someone else in my previous birth. I am suffering due to my own misdeeds. Whom should I blame?





Gentleman– Motilal, you are noble hearted.



It is such a delight to hear your story.





Motilal– Sir, I am the child of Mother Ganga and Yamuna. I make my living on them only. They only give me noble thinking and earning.

Gentleman – Great!





Motilal– “Once my wife wanted a garment. I asked Mother Yamuna. A little while after one gentleman hired me for Rs 5. I bought a garment with the same and told my wife. —“Mother Yamuna gifted you this. Our ancestors helped Lord Sri Ramchandra, Mother Sita and Lord Laxman to cross here on their jouney towards Chitrakut. I might have inherited some Punya.”



The gentleman tipped him generously and said “You are so Noble. Graces of Mother Ganga and Yamuna are equally great.”





*

3

இந்த தேசம் எதனால் இன்னும் ஜீவனுடன் இலங்குகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது. அன்றாட வாழ்க்கைக்கே அல்லல் படும் ஏழைப் படகோட்டி. ஆனால் அவனோ அப்படி அலுத்துக் கொள்ளவில்லை. அவனை ஏமாற்றவும் பல பேர். அதனால் அவன் மனமுடையவில்லை.

கங்கா மாதா, யமுனா மாதாவின் அருள் தன் மீது பொழிகிறது என்பதை அவன் உள்ளார்ந்து நம்புகிறான். அந்த நம்பிக்கையே அவனுக்கு எல்லாமாக இருக்கிறது.



அது, அவனை வாழ வைப்பதோடு இந்த தேசத்தையும் உயிர்த்துடிப்புடன் இருக்கச் செய்கிறது.



நகர்ப்புறத்தில் ஏமாற்று வேலையையே தொழிலாகக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஃபிராடு கும்பலை இப்போது நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் பகீர் என்கிறது.

அந்த திருட்டுக் கும்பல் இந்த தேசத்தை அரித்துப் பீடித்தாலும் தேசத்தின் ஜீவனை உயிர்மூச்சைத் துடிக்க வைப்பது மோதிலால் போன்ற ஏழைப் படகோட்டிகளே.



நன்றாக உற்றுப் பாருங்கள், உங்கள் அருகிலும் கூட ஒரு மோதிலால் இருக்கக் கூடும். அவனைக் கையெடுத்துக் கும்பிடுங்கள்!

***

எழுதியவர் : (14-Dec-17, 3:12 am)
பார்வை : 74

மேலே