உண்மையான காதல் பிரிவதில்லை - தொடர்ச்சி 8

" வீடு ரொம்ப நல்லா இருக்கு. ", என்றான் ஜெகன் புன்னகையோடு.

" இவ்வளவு பெரிய வீட்டில் நாம் இருவர் மட்டுமா இருக்க போகிறேன்?. ", என்றாள் ஜெனி.

" ம்ம். ", என்ற ஜெகனிடம், " வேண்டாம். உங்க அப்பா, அம்மாவும் இங்கேயே இருக்கட்டும். ",என்றாள் ஜெனி.

" ஏனால் அப்படிச் சொல்கிறாய்? ", என்று கேட்ட ஜெகனிடம், " இருபதைந்து வருடமாக உங்களை வளர்த்தவர்கள் உங்களைப் பிரிஞ்சு எப்படி இருப்பாங்க? அதுவும் இல்லாமல் புதுசா கல்யாணமாகி வந்ததுமே தன் மகனை பிரித்துவந்து விட்டேன் என்று வருத்தப்படுவார்கள். ", என்றாள் ஜெனி.

" இப்போது என்ன செய்யலாம்? ", என்று ஜெகன் கேட்க, " நாளை நாம் சென்று உங்க அப்பாவை அழைத்துக் கொண்டு வருவோம். ", என்றாள் ஜெனி.

" சரி. ஆனால், நாளைக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதனால, நீ போய் அழைத்துவா. ", என்றான் ஜெகன்.

" சரிங்க. ", என்றவள் இரவு உணவைப் பரிமாறச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கச் சென்றனர்.

பொழுது புலர்ந்தது.
கண்விழித்த ஜெனி காலை நேர வேலைகளில் மூழ்கினாள்.
ஜெகன் எழுந்து குரங்கு நடனம் கலந்த சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான்.

காலை உணவு முடித்து ஜெனிபர், ஜெகனின் பெற்றோரை அழைத்துவரச் சென்றார்.

வீட்டில் நுழைந்தது
" வாம்மா ஜெனி. ", என்றார் காயத்ரி அம்மா.

" அத்த, நீங்களும் எங்களோட வந்துருங்க. ", என்றாள் ஜெனி.

" அது சரிப்படாது மா. புதுசா கல்யாணம் ஆனவங்கள தனியா இருக்க விடுறது தான் முறை. ", என்றார் கந்தசாமி.

" அதெல்லாம் ஒன்னுமில்லை. நாம ஒரு குடும்பம். ஒன்னாத்தான் இருக்கனும். அவ்வளவு பெரிய வீட்டில் நாங்க ரெண்டு பேரும் தனியா வாழ்றது முறையல்ல. நீங்க இருவரும் கண்டிப்பா என்னோட கிளம்பி வரணும். ", என்று கெஞ்சினாள் ஜெனி.

காயத்ரியும் கந்தசாமியும் சம்மதித்தார்கள்.

ஒரு லாரி வரவழைக்கப்பட்டு புறாக்கூண்டு மற்றும் உடைமைகளை ஏற்றிக் கொண்டு, ஜெகனின் அப்பா, அம்மாவை தன் காரில் அழைத்துக் கொண்டு புதுவீடு வந்தாள் ஜெனிபர்.

அங்கே ஜெனிபரின் அப்பா, அம்மா இருந்தனர்.

" அம்மா, அப்பா எப்போ வந்தீங்க? ", என்றாள் ஜெனி.

" மாப்பிள தான் மா அழைத்து வந்தார். இங்கதான் இருக்க வேண்டும்னு சொல்லிட்டார். ", என்றார் கனகராஜ்.

பெற்றோர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, ஜெனிபர் ஜெகனைத் தேடிப் போனாள்.

மொட்டைமாடியில் நின்றிருந்தான் ஜெகன்.

ஜெகன் அருகில் சென்று நின்றாள் ஜெனி.

திரும்பிப் பார்த்தான் ஜெகன்.
புன்னகைத்தாள் ஜெனி.

இருவரும் கட்டிக் கொண்டு முத்தமழை பொழிந்தார்கள்.
பிறகு விலகி மதிய உணவு சமைக்கச் சென்றாள் ஜெனி.

போலீஷ் கமிஷ்னர் அலுவலகம் சென்றான் ஜெகன்.

அங்கு தான் பதவி ஏற்க வேண்டிய அனுமதிக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டான்.
அவனிடம் சி.பி.ஐயில் இரகசிய வழக்கு ஒன்று ஒப்படைக்கப்பட்டது.

பொறுப்பை ஏற்று வேலையைத் தொடங்கினான் ஜெகன்.

குடும்பத்தாருடன் தினமும் மகிழ்ச்சியாக நாட்கள் நகர, தனது பணியிலும் செம்மையுற ஒப்படைக்கப்பட்ட வழக்கை மூன்று மாத காலத்தில் முடித்து, குற்றவாளியைப் பிடித்து ஒப்படைத்தான்.

பாராட்டுகளைப் பெற்று வீடு திரும்பியவனுக்கு அங்கே இன்னொரு சந்தோஷம் காத்திருந்தது.
அது ஜெகன் அப்பாவாகப் போகிறான் என்பதாகும்.

இனிப்புகள் பரிமாற செவி வழியே கேட்ட சேதி இதயத்தில் இனித்தது.

ஒடிச் சென்று ஜெனியைத் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடினான் ஜெகன்.

" டேய் ஜெகன்! போதும் டா. அவளை கீழ இறக்கிவிடு. ", என்றாங்க காயத்ரி அம்மா.

ஜெகன் இறக்கிவிட ஜெனி வெட்கப்பட்டு சமையலறைக்குச் சென்றுவிட, ஜெகன் அப்படியே வெளியே போனான்.
பரிசாகத் தொட்டிலை வாங்கிக் கொண்டு வந்து வைத்தான்.
அனைவரும் மகிழ்ந்திட இரவு உணவிற்குப் பிறகு படுக்கையறையில் ஜெகன் ஜெனியின் மடியில் படுத்திருக்க,
" உங்களுக்கு என்ன குழந்தை வேண்டும்? ", என்றாள் ஜெனி.

" எனக்கு உன்னை போல் அழகான பெண் குழந்தைதான் வேண்டும். ", என்றான் ஜெகன்.

" எனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும். ", என்றாள் ஜெனி.

" இல்ல. பெண் குழந்தை தான் பிறக்கும். "

" இல்ல. ஆண் குழந்தை தான் பிறக்கும். "

அப்படியே சண்டை வர,
ஜெனி ஜெகன் கன்னத்தில் முத்தமிட்டாள்.
" சரி. சரி. ஆண் குழந்தையே பிறக்கட்டும். ", என்று ஜெனி கன்னத்தில் பதில் முத்தம் இட, " சரி.சரி. உங்க விருப்பப்படி பெண் குழந்தையே பிறக்கட்டும். ", என்றிட சமாதானம் பிறந்தது.

வீட்டு வேலைகள் அனைத்தையும் ஜெனியே பார்த்துக் கொள்வாள்.
காயத்ரி அம்மாவும் உதவியாக ஏதாவது வேலை செய்து பேசிக் கொண்டிருப்பார்.
மற்றவர்கள் வேலைக்குச் சென்றுவிடுவார்கள்..

இப்படியே நாட்கள் கழிய, எட்டாவது மாதம் வளைகாப்பு நடத்தினார்கள்.
நண்பர்கள் பலர் சூழ, அருமையாக இருந்தது அங்கு காட்சியாவும்.

மாதம் ஒன்பது ஆனது.
ஜெனி கொஞ்சம் வேலை செய்ய கஷ்டப்பட்டாள்.

காயத்ரி அம்மா, " நீ போய் ஓய்வெடுத்துக் கொள். இந்த வேலைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். ", என்றார்.

ஆனால், ஜெனிபரோ, " வேண்டாம் அத்த, இப்போ கஷ்டப்படாமல் இருந்தால் பின்னாடி கஷ்டம் வரும். எங்க குழந்தை சுகப்பிரசவமாகப் பிறக்க வேண்டும். ", என்று தொடர்ந்து வேலை செய்தாள்.

பத்து மாதங்கள் ஆனது.
ஜெனிபருக்கு வயிற்று வலி எடுத்தது.
சிறிது நேரத்தில் வீட்டிலேயே இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.

அதில் ஒன்று ஆண்.
மற்றொன்று பெண்.

ஜெனிபர் மற்றும் ஜெகனின் விருப்பங்களை நிறைவேற்றிய கடவுளுக்கு நன்றிச் செலுத்திவிட்டு, அயர்ந்து படுத்திருந்த ஜெனியின் நெற்றியில் முத்தமிட கண் விழித்தாள் ஜெனி.

ஜெனியிடம் குழந்தைகளைக் காட்டி மகிழ்ந்தான் ஜெகன்.

அனைவரும் சந்தோஷமாக குழந்தைகளைக் கொஞ்சிட குடும்பத்தின் இன்றியமையாத குழந்தைச் செல்வங்களின் வரவைக் கொண்டாடினர்..

புறா வந்தது.
காகிதம் தந்தது.

அதில், " ஜெகன் நீ இப்போ அப்பாவாகி விட்டாய். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் குழந்தைகளுக்கு என் வாழ்த்துகள்.
ஜெனியிடம் நலம் விசாரித்தேன் என்று சொல். காலம் கனியும் போது நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் அவசியம் இங்கு வருகை தர வேண்டும். ", என்று எழுதப்பட்டிருந்தது.

பெரியவர் குரங்கனாரின் நினைவுகள் மனதில் ஊசலாடின...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-Dec-17, 2:45 pm)
பார்வை : 357

மேலே