திருமண நாள்

புது புடவை கட்டி
தாழை பின்னிய கூந்தலில்
மணம் தரும் மல்லிகை சூட்டி
புது மணக் கோலத்தில்
புன் சிரிப்போடு
புது மலர் தூவி
மனைவியாய் என் பொன் மனதில்
குடியேறிய பொன்னான நாள்
கண்னோடு கண்ணும்
நெஞ்சோடு நெஞ்சும்
இதயங்கள் இரண்டும் ஒன்றாய்
இணைந்த இனிமையான நாள்
இறைவனின் நல்லருளால்
பெற்றோரின் பேரன்பினால்
என் உயிர்
சகோதிரிகளின் அன்போடும்
என் அருமை
சகோதரர்களின் பாசத்தோடும்
நண்பர்களின் நட்போடும்
உற்றார் உறவுகளின் வாழ்த்துக்களோடும்
உரிமையுடன் உன் கை
கொர்த்த நாள்..!

எழுதியவர் : சேக் உதுமான் (15-Dec-17, 11:14 am)
Tanglish : thirumana naal
பார்வை : 255

மேலே