நீயும் அழகு உன் மீது கொண்டதால் எந்தன் காதலும் அழகு

நீயும் அழகு உன் மீது கொண்டதால் எந்தன் காதலும் அழகு!!!!!


புல்லுக்கு நீர் ஊற்றும் பனித்துளியே
அருவியை குளிப்பாட்டும் மழைத்துளியே
இயற்கையை களிப்பூட்டும் என் கயல் விழியே.....................

நீரில் முகம் பார்த்து ரசிக்கும் மஞ்சள் தாமரையே
நீள கருங்கூந்தலில் மல்லிகையை
விதைபோடும் விஞ்ஞானமே......................

தரை பார்த்து குனிந்து செல்லும்
உன் பெண்மையை கண்டு
வானம் தரைநீரில் விழுந்து
ரசிக்கும் நீ தீட்டிய கண்மையை கண்டு ..................................



உன் பாத அச்சினை பதித்ததால்
காதல் கொண்டன கடற்கரையும்
உன் புகை பட அசினை பதித்ததால்
காதல் கொண்டன தொடுதிரையும் ....................................


உன் இமைகளை காதல் செய்யும்
பட்டாம் பூச்சி கூட்ட்டம்
உன் விழிகளில் தேன் எடுக்க சுற்றும்
தேன் பூச்சி கூட்டமும்....................................
.


நீ கழட்டி விட தேய்ந்து போகும்
உன் காலணியும் கண்ணே
நீ சுழற்றி விட சுற்றிவரும் ஆடவன் இனம்
உன் தாவணியில் பின்னே ..........................................

என்னை நேசித்தவரில்
எனக்கு பிடித்தது மிக சிலரே
அதில் என்னிடம் இருந்து
என்னையே பிடுங்கிய மலரே........


தேனோடு உனை தின்று
தீராத காதலொன்று நாம்
சுவைக்கும் காலம் வசந்தகாலம் .......................



இயற்கையும் சுற்றி சுற்றி உன்னை
காதல் செய்யும் அளவிற்கு


நீயும் அழகு உன் மீது கொண்டதால்
எந்தன் காதலும் அழகு ..............

எழுதியவர் : ராஜேஷ் (16-Dec-17, 2:40 am)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 304

மேலே