இதயமே மன்னித்து விடு மறந்து விடு

இதயமே ..

என் இதயத்தில்.. உன்னையேற்றுக்கொண்டேன்
உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ...

உன்னை உயிராய் காதலித்தேன் ...
உன்னை என் மனைவியாய் காண வேண்டும் என்று...

உன் இதயத்தை என்னுள் பூட்டிவைத்தேன் ...
உன் இதயத்தை தொலைத்து விட கூடாது என்று

விலை மதிப்பு இல்லா உன் இதயத்தை எனக்கு கொடுத்துவிட்டாய்..
அதன் மதிப்பை நான் புரிந்துகொண்டேன் என்று..

இதயபூர்வமாக உன் இதயத்தை ஏற்றுக்கொண்டேன்..
என் உயிரிலும் மேலாய் என் இதயம் உன்னை நேசித்ததால் ...

மன்னித்து விடு ..

உன்னுடன் வாழ வேண்டும் என்று நினைத்தேன்...
உன்னை ஏற்றுக்கொள்ள மற்ற இதயங்கள் விரும்பாததால் ....

உன்னை என் மனைவியாய் காண நினைத்தேன்...
உன்னை உயிராய் காதலிப்பது மற்றவர்கள் நினைக்காமல் போனதால்..

தொலைந்து விட கூடாது என நினைத்த உன் இதயம்...
காணாமல் போனது பூட்டிய இதயத்தை எல்லோரும் சேர்ந்து உடைத்ததால் ...

நீ கொடுத்த இதயம் வீணாகி போனது ..
அதற்க்கு என் வீட்டில் உள்ளவர்கள் இடத்தில் விலை இல்லாமல் போனதால்...

உயிராய் காதலித்த இதயத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது ...
உன்னை உயிராய் காதலித்தது மற்றவர்களுக்கு புரியாமல் போனது..

மறந்துவிடு ....

என் இதயம் சொல்வது உனக்கு புரியும் என்பதால் அல்ல ...
நம் இதயம் சொல்வது மற்றவர்களுக்கு புரியாமல் போனதால்..

உன்னை உயிராய் காதலிப்பதால் அல்ல...
உன்னுடைய உயிர் என்னுள் கலந்திருப்பதால்...

இதயம் உடைந்து விட்டதற்காக அல்ல..
மீண்டும் இதயத்தை ஒட்டவைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல் போனதால்..

விலை மதிக்கமுடியாததை தொலைத்ததற்காய் அல்ல...
இனி என்னிடம் அதைவாங்கும் சக்தி இல்லாமல் போனதால...

இதயமே உன்னை ...ஏற்றுக்கொண்டேன்...
மன்னிப்புக்கேட்டு ....சென்றுவிட்டேன்...
மறந்துவிட்டேன் என்று .நடிக்கின்றேன்....

மூன்றுவார்த்தையின் விளக்கம் புரியவில்லை...
புரிந்த பின்பு அது எனக்கு கிடைக்கவில்லை.....
உண்மை இல்லை என்பதுதான் காதலோ ..
காதலில் வெற்றிபெறுவது பொய்தானோ...

வாழ்க காதல்.......

எழுதியவர் : samuel (16-Dec-17, 9:23 am)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 106

மேலே