காதல்

நறுமணம் வீசும் மலர் தோட்டம்
வந்தடையும் வண்டுகள் கூட்டம்
மொய்த்திடும் தேன் தரும் மலர்கள்
தேடி , ரீம், ரீம் என்று ஒலி எழுப்பி
ஒரு மலரில் தேன் உண்டு ஓய்வதில்லை
வந்து, தேன் தேடி பல மலர்கள் நாடி ஓடும்
உண்டு, களித்து, மயங்கும் வரை வந்து;

ஒரு மலரில் நாட்டம் வைப்பதில்லை
தேனுண்ணும் வண்டு ஆனால் வஞ்சியே
என் காதல் கனிரசமே, நானோ நான்
விரும்பும் மல்லிகையாய் நீ இருக்க,
உன்னையன்றி வேறொரு பெண்ணை
கண்ணால் பார்ப்பதும் இல்லையடி;
உன் அழகில், உந்தன் கண்கள் தரும் மையலில்,
உந்தன் மோகன முல்லைச்சிரிப்பில்
உந்தன் பண்பேந்தும் 'உடல் மொழியில்'
உன்னைக் கண்ட முதல் நாள் முதல்
பார்வையிலேயே உன்மனதையடைந்தேன்;
என் வசம் இழந்து ,என்னையும் இழந்து
நீ விரும்பும் உன்னவனாகினேனே நீ அறியாயோ
பெண்ணே, என்றும் நான் உன்னை மட்டுமே
நாடி, உன்னைவிட்டு பிரியா ஒரு மலர்
தேடி மது அருந்தும் ஆண் வண்டு !
என் மல்லிகையே நீ தானடி எந்தன் பெண் வண்டு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Dec-17, 6:00 pm)
Tanglish : kaadhal
பார்வை : 258

மேலே