நந்தனின் கடலோரக் கனவு

கடற்கரையில் அமர்ந்திருக்கிறேன்.
சுற்றியிலும் பாம்புகள்.
கடலிருந்து பாம்புகளின் படையெடுப்பு.

இப்பாம்புகள் வித்தியாசமானவை.
யாரையும் தீண்டவில்லை.
உடலுக்குள் புகுந்து உருக்குலைத்து விடுகின்றன.

சுற்றிலும் அலறல்கள்.
மக்களின் ஓட்டங்கள்.
தப்பிக்க வழியில்லை.
குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை.

நானும் எழுந்து ஓடுகிறேன்.
கால் வைக்க இடமில்லை.
மணலெங்கும் அவற்றின் உருவங்கள்.
நெளிவதும் எளிதாக சதை துளைத்து உடலில் நுழைவதும், உடலின் மறுபாகத்தில் துளைத்து வெளியேறுவதும் என்று அட்டகாசம் செய்கின்றன.

அதோ! அந்த அழகி மயங்கிவிழுகிறார்.
ஹாலோ மேடம்! என்னவாயிற்று?
பதில் வாய் அசைகையில் வாயிலிருந்து வெளிப்பட்டது பாம்பு.

பதறி எழுந்தேன்.
ஒட்டம் பிடித்தேன்.
நான் ஓட, ஓட அது என்னைத் துரத்திக் கொண்டே பறந்து வந்தது.
அப்பாட! வெகுதூரம் வந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு நின்றவன் திருப்பினேன்.
பறந்து வந்த பாம்பு இடதுகண்ணை துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல வாலைப் பிடித்து இழுத்தேன். பாம்பு இரண்டு துண்டானது.
தலைப்பகுதி உள்ளே நுழைய விரைந்து செயல்பட்டவன் பாம்பின் மீதியை பிடித்து இழுத்தெறிந்தேன்.
இடக்கண்ணில் இரத்தம் கொட்டியது.
பார்வை மங்கவில்லை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Dec-17, 7:16 pm)
பார்வை : 1250

மேலே