காதலெனும் சோலையிலே ராதே ராதே - சிந்துபைரவி

திரையிசைப் பாடலும் மரபும்

பாடலாசிரியர் கு.மா.பாலசுப்பிரமணியன் இயற்றி, G. ராமனாதன் இசையமைப்பில் M.G.R – அஞ்சலிதேவி நடித்த ’சக்கரவர்த்தித் திருமகள்’ திரைப்படத்தில் சீர்காழி S.கோவிந்தராசன் சிந்துபைரவி ராகத்தில் (1957)பாடிய ஒரு அருமையான பாடல் ‘காதலெனும் சோலையிலே ராதே ராதே’.

காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே (காதலென்னும்)

என்னிதய வீணையிலே ராதே ராதே
இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே
உன்னழகின் போதையிலே ராதே ராதே
உன்னழகின் போதையிலே
எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே

புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே
மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே
கன்னம் குழிவதிலே ராதே ராதே
எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே (காதலென்னும்)

பெண்குலத்தின் தேவதையோ ராதே ராதே
பேசுகின்ற ஓவியமோ ராதே ராதே
நீ பேசுகின்ற ஓவியமோ ராதே ராதே
மின்னல் போல நீ மறைந்தாய் ராதே ராதே – உன்னை
மீண்டும் விழி தேடுதடி ராதே ராதே (காதலென்னும்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Dec-17, 12:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 182

சிறந்த கட்டுரைகள்

மேலே