பொற்றாமரையே புகல்

வற்றா நதியாம் பொதிகைத் தமிழ்நதி
பொற்றா மரைக்குளச்சங் கப்புலவர் நாநதி
வற்றிடுமோ யாப்பை மறந்த தமிழினரால்
பொற்றா மரையே புகல் !

தெரிந்து கொள்ளுங்கள் :

மதுரை மீனாட்சி சொக்கநாத ஆலயப் பொற்றாமரைக் குளத்தினில்
மிதந்த சங்கப்பலகையில் தகுதி சான்ற புலவர்கள் கவிதை யாத்தனர்
விவாதித்தனர்..அவர்தம் நாவிலிருந்து நாவின் நதியாகப் பொதிகைத்
தமிழ் பெருகியோடியது..

புகல் ---சொல்

யாப்பு ---கவிதை யாக்கும் இலக்கண விதி . வகுத்தவர் தொல்காப்பியர்
மேலே உள்ள கவிதை யாப்பு வழியில் அமைந்த ஒரு விகற்ப இன்னிசை வெண்பா .

எழுதியவர் : கவின் சாரலன் (24-Dec-17, 10:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 124

மேலே