உதயம் தேடும் அஸ்தமனம் --- நெடுந்தொடர் ----- பாகம் 14

"டேய், என்னடா, இன்னிக்கும் மூஞ்சிய தொங்க போட்டுட்டு வர்ற, உனக்கு இதுவே பொழப்பா போச்சு டா" உள்ளே நுழையும்போதே அருணின் வார்த்தைகள் பிரவீனை கேட்டன.

"இல்லடா, இவ்ளோ நாள் நான் முகத்தை தொங்கபோட்டுட்டு வந்ததுக்கு என் மனசு காரணம், இன்னிக்கு காரணம் வேற டா" என்றான் பிரவீன்.

"ஆஹா, ஏதோ புதுசா வேற ஆங்கிள் ல யோசிக்க ஆரம்பிச்சுட்டான் போல?" என்றான் அருண்.

"இல்ல டா, நான் செஞ்ச தொல்லைகள் அனுவை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும் னு நெனச்சா என் மேலயே எனக்கு கோவமா வருது டா" என்றான் பிரவீன்.

"டேய், என்ன டா, என்னவோ போல பேசற, என்ன ஆச்சு?" என்றான் வெற்றி.

"மச்சி, என்ன டா" என்றான் சந்தோஷ்.

"டேய், அனுவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சு டா" என்றான் பிரவீன்.

ஒரு நிமிடம் அனைவருமே ஆடிப்போய்விட்டனர்.

"என்ன டா சொல்ற?" என்றான் அருண்.

"ஆமாம் டா" என்று தொடங்கி அனுவின் வாழ்க்கையை சொல்லி முடித்தான் பிரவீன்.

"என்ன டா, இது ரொம்ப ஷாக்கிங் தான்" என்றான் அருண்.

"மனசே சரி இல்ல டா, நானும் பொங்கலுக்கு ஊருக்கு போகலாம் னு இருக்கேன்" என்றான் பிரவீன்.

"சரி டா, நாங்க எல்லாருமே போறோம், நீயும் போயிட்டு வா, இங்க தனியா இருக்க வேணாம்" என்றான் சந்தோஷ்.

"டேய், வெற்றி, நீ போய்ட்டா ஷிகா இங்க தனியா இருப்பாளே டா" என்றான் அருண்.

"இல்ல டா, அவளையும் கூட்டிட்டு போறேன்" என்றான் வெற்றி.

"வெவரம் டா நீ, ஆனா உங்க அப்பாவை எப்படி சமாளிப்ப" என்றான் அருண்.

"மேனேஜ் பண்ணுவோம்" என்றான் வெற்றி.

"பொங்கல் வரைக்கும் முடியாது டா, நான் நாளைக்கே போறேன், 2 மாசம் எனக்கு லீவு வேணும் டா, சந்தோஷ், நாளைக்கு நீ பேசி எனக்கு லீவ் அப்ப்ரூவ் வாங்கி தா டா" என்றான் பிரவீன்.

"டேய், என்ன டா, லாங் லீவ், அதுவும் இவ்ளோ எமெர்சென்சியா,இது உன்னோட கரியர்க்கு பிரச்சனை ஆய்டா போகுது டா" என்றான் சந்தோஷ்.

"இல்ல டா, என்ன ஆனாலும் சரி, நாளைக்கு நான் போகணும்" என்றான் பிரவீன்.

"ட்ரை பண்ணலாம் டா" என்றான் சந்தோஷ்.

"எதுக்கும் நீ இன்னொருவாட்டி யோசி டா" என்றான் அருண்.

"யோசனை வேணாம் டா, போகணும்" என்றான் பிரவீன்.

"சரி டா, நீ ரெஸ்ட் எடு நாளைக்கு பேசிக்கலாம்" என்றபடி சந்தோஷ் கையில் போனை எடுத்து காயத்ரிக்கு கால் செய்தவாறே நகர்ந்தான்.

"என்ன டா, இங்க சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கும்போதே போனை எடுத்து காயத்ரிக்கு டயல் பண்றியா" என்றான் அருண்.

"டேய், விளையாடாத டா, அவகிட்ட பேசவே இல்லை இன்னிக்கு" என்றான் சந்தோஷ்.

அந்த பதிலை கேட்டவுடன் வெற்றியின் பக்கம் திரும்பினான் அருண்.

"எனக்கு தெரியும் டா, நீ இப்போ என்னை பாப்பன்னு, நான் ஷிகாக்கு கால் பண்ணல" என்றான் வெற்றி.

பேசிக்கொண்டிருக்கும்போதே அருணின் போன் கனைத்தது.

"இது யாரு டா, புது நம்பரா இருக்கு" என்றபடி போனை எடுத்தான் அருண்.

"ஹலோ, அருண்???" என்றது எதிர்முனை பெண்ணின் குரல்.

"யா, ஸ்பீக்கிங்" என்றான் அருண்.

"இட்ஸ் லேகா பிரோம் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங், நார்த் விங், இஸ் திஸ் ரைட் டைம் டு ஸ்பீக்?" என்றாள் லேகா.

"யா" என்றான் அருண்.

பாகம் 14 முடிந்தது.

___________________தொடரும்_________________

எழுதியவர் : ஜெயராமன் (26-Dec-17, 6:05 pm)
பார்வை : 230

மேலே