அன்னை எங்கே???

எத்தனையோ
பாடங்கள்
பயின்றாலும்....

எத்தனையோ
கேளிக்கைகள்
இருந்தாலும்...

எத்தனையோ
சிரிப்பொலிகள்
எழுந்தாலும்.....

என் வகுப்பறை விட்டு
விடுதியறை செல்லும்
அந்த கணம்....

என் ஆழ் மனம் ஏங்கும்
பள்ளி முடிந்து திரும்புகையில்
என்னை வாரி அணைத்து
முத்தமிட்ட என் அன்னை
இக்கல்லூரியில் இல்லையே....


எழுதியவர் : Loubri (2-Aug-11, 12:49 pm)
சேர்த்தது : பிரைட்சன்
பார்வை : 354

மேலே