அப்பா

அம்மா அழும்
கண்ணீருக்கு மேலே
"அப்பா சிந்தும் வியர்வைத்துளி "

அம்மாவின் கண்ணீர்
கொஞ்ச நேரம்
அப்பாவின் வியர்வை
" ஆயுள்தூரம்"

அம்மா இடுப்பில் தூக்குவார்
இயன்றதைக் காண்பிக்க!
அப்பா
தோளில் தூக்குவார்
"மனதில் தோன்றாததையெல்லாம்"
காண்பிக்க

"ஒவ்வொருவீட்டிலும்
ஆண்டவன்
அம்மா சாமியை
அனுப்பிவைத்தான
அதுக்கும்மேல
பிள்ளையார் சாமியாய்
பிடித்து வைத்தான்
அப்பா சாமியை"

அம்மா சுமப்பது
அகிலத்துக்கே தெரியும்
"அப்பா கனவிலும் சுமப்பான்
கண்ணைமூடி
நினைவிலும் சுமப்பான்
உன் உருவத்தை நாடி "

அம்மாவின்
அடிவயிற்றின்
சுமந்த காயத்தின்
சுவடுகள் கூட
புடவைக்குள் புகுந்துகொள்ளும்
அதுக்கும்மேலே
"அப்பா சுமந்ததற்க
அடையாளமாய்
காப்பு காய்ச்சிய வடுக்கள்
காலத்துக்கும்
கரையாமல் ரணங்களாய் நிற்கும்"

"சுமைகள் எல்லாம்
இறக்கி வைத்துவிடலாம்
பிள்ளை சுமையைக்கூட
உன்னை
ஆளாக்கும் ஆசையில்
அப்பாவின் அங்கலாய்ப்பு சுமை
முதிர் வயதிலும்
முடிந்துபோகாது "

"ஆசைப்பட்டதை
பிள்ளைகளோடு சேர்ந்து
அம்மாவும்
அனுபவிப்பாள்
அப்பாவுக்கு
ஆண்டவனா வாங்கிக்கொடுப்பான்
அப்படிக்கொடுத்தாலும்
அதுவும்
அவர்களுக்கு தானே
அப்பாகொடுப்பார் "

"எல்லாரும்
சொல்லிக்காட்டுவார்கள்
செய்ததை
அப்பா
நீமட்டும்தான்
சொல்லாமல் செய்துகாட்டுவாய் "

"அப்பா
வானத்துக்கு கீழேயும்
பூமிக்கு மேலேயும்
விளையாத தங்கம் நீ
பூட்டாத பொக்கிஷம் நீ
தேடிக்கிடைக்காத தெய்வம் நீ
எனக்கு வாய்ச்ச வரம் நீ"

"அப்பா
நீ தான் என் வானம்
சிறகடிதது பறக்க
நீதான் என் முதல் கதாநாயகன்
நீதான் என் முதல் காதலன்
நீதான் என் முதல் கற்பனை
நீதான் என் முதல் முன்மாதிரி
நீதான் என் முதல்குரு
நீதான் உலகம்"

"அப்பா
உன்னைப்போல யாருமில்லை
உனக்குப் பிறகு யாரும் பிறப்பதில்லை
உனக்கு ஈடும் யாரில்லை"

"அப்பா
என் பிறப்பு சாதாரணம்
நீஎனக்கு சரித்திரம்"

எழுதியவர் : பபூதா (26-Dec-17, 9:41 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : appa
பார்வை : 88

மேலே