நண்பன்,நட்பு

உள்ளொன்று, புறமொன்று என்றில்லா
உள்ளதால், உணர்வால் எப்போதும்
ஒன்றாய் இருக்கும் தூய்மை நட்பு அமையும்
இலக்கணமாய் நல்ல நண்பருக்கு.

குணம் குன்றி நண்பனவன் தனக்கு
தீமையே செய்ய நேர்ந்திடினும் -நல்ல
நண்பன் அவற்றை ஒருபோதும் நினையாது
தான் அவன்மீது கொண்ட நட்பில்
குறையேதும் வைத்திடான் காண் .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Dec-17, 9:02 am)
பார்வை : 655

மேலே