காதல் உலகம்

காதலித்து பார்
புதிய உலகத்தில் நீ பிறந்துருப்பாய்
அங்கே உனக்கென ஒரு புதிய உலகம்
உன்னை சுற்றி ஆயிரம் எண்ணங்கள்
எண்ணங்களில் பல வர்ணஜாலங்கள்
மனதில் பதிந்தவனை / பதித்தவளை பலமுறை வரைந்துவிடுவாய்
நினைவு எனும் காகிதத்தில்
நீ பேசிடுவாய் உன்னோடு உனக்குள் இருக்கிறவரோடு
அவ்வப்போது மறந்து விடுவாய் உன்னையே நீ
பசிக்கும் தூக்கத்திற்கும் விடுமுறை விட்டிருப்பாய்
கவிதை போட்டியில் அருவிகளும் இயற்கையும் தொற்று போகும்
காதல் கலந்த வரிகளை ரீங்காரமிடும் வண்டுகளவாய்
வாலியும் சுகமும் கலந்த புது உணர்வை சுவைப்பாய்
உலகமே பொய்யாய் நின்று உன் நினைவு மட்டும் மெய்யாய் தெரியும்
வெறுப்பிற்கும் நேசத்திற்கும் வித்தியாசம் அறிவாய்
பேசியபின்னும் இதை பேசவில்லையே என உணர்வாய்
காதலித்து பார் உனக்கே புரியும் புதிய உலகின் வரைபடம்