என்னுள் பூத்த மங்கைப் பூ
வாடிய பூவாக இருந்தால்
வீசிவிடலாம் - என்னுள் நீ
வாடாமல் பூத்தவளல்லவா
வீசிவிடவா முடியும்?
மல்லிகைப் பூ என்றால்
மணம் தந்து வாடிவிடும் - நீ என்
மங்கைப் பூ அல்லவா - மனமோடு
மலர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றாய்.
சன்னலை திறந்தாலும் மூடியே இருந்தாலும்
சுகமான காற்று வீசிக் கொண்டுதான் இருக்கும்.- என்
எண்ணத்தில் உன் சுவாசமும்
வீசிக்கொண்டு தான் இருக்கும்.- என்னை நீ
விலக்கினாலும் உன்னை நான்
விலகவிடமாட்டேன்.- உன்
நறுமணத்தில் தானே என் ஜீவன்
நகர்ந்துக் கொண்டு இருக்கிறது.
தகர்த்து விடாதே, - நீயும்
தள்ளிப்போகாதே.- நீ என்னுள் பூத்த
மங்கைப் பூ - நான் மகிழும் பூ.
மலரும் கொடியே - நீ என்றென்றும் பூக்க
புலரவைக்கும் என் மடியே.