என் வாழ்க்கை விடுகதை - 4


தலையை வைத்தாவது கடனை

செலுத்திவிட வார்த்தை சொல்வதுண்டு

நானும் தலைவைத்து கடனைத்தான் வாங்கி

கடமையை முடித்த போதும்

நிம்மதி எனக்கு இல்லை - இரவு

உறக்கம் வரவில்லை ஏனோ அதற்கும்

இறக்கம் இல்லை என்ன நான் செய்ய

தங்கை மனம் முடிந்து மீண்டும்

குழந்தை பிறந்தவுடன் நிம்மதி வரும் என்று

மீண்டும் ஒரு இடி என் தலையில்

வந்து விழ எப்படி நான் சொல்வேன்

குறை பிரசவத்தில் பிறந்ததனால்

கெழுதும் நிற்க வில்லை மூளை வளர்ச்சி

இல்லை பிறந்த குழந்தையின் எடை இல்லை

இன்னும் அடுக்கி கொண்டே

என் சோகத்தை அதிகரித்தார் மருத்துவர்

கைவிரித்தார் தினமும் பயிற்சி கொண்டால்

குழந்தை ஒருவேளை பிழைக்கும் என்றார்

மீண்டும் கடன் பட்டேன் பிழைக்க வைக்க

என் வைப்பு நிதி அடகு வைத்தேன்

எல்லாம் மாறிவிடும் என்று தங்கைக்கு

ஆறுதல் சொல்லிவிட்டு தனியே அழுது

விட்டேன் என் கண்ணீரை கண்டால்

பெற்றவள் மனம் குலையும் தங்கையின்

மனம் கருகும் அதனால் மறைத்து விட்டேன்

இயல்பாய் இருப்பது போல் நடித்து விட்டேன்

இருந்தும் தளர வில்லை விடுவதாய்

மனமுமில்லை மீண்டும் போராட

மனதினை பயிற்று வித்தேன்

வாழ்வில் ஜெய்க்க மட்டும் வழிதான்

தெரிய வில்லை அதை தான் தேடி கொண்டே

என் வாழ்கை தொடங்கி கொண்டேன்






இன்னும் விடுகதை தொடரும்


எழுதியவர் : rudhran (2-Aug-11, 5:59 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 387

மேலே