வாழ்த்திவரும் ஈராயிரத்துப்பதினெட்டு

வாழ்த்திவரும் ஈராயிரத்துப்பதினெட்டு (2018)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆழிகூடு மேகவான அன்னைவயல் மண்ணதாக
== அடுப்பெரிக்கும் தீயதாக அயரத்தீண் டுகாற்றுமாக
தோழமையாய் ஐந்துகொண்டு தொகுத்தளந்து வாஞ்சையோடு
== தொழிலியற்கை காவலோடு தொன்றுதொட்ட அறங்களோடு
பேழைகளில் பொருள்கூட்டிப் பிடித்தவாறு மனைகூட்டிப்
== பெரிதிதென்ற மனங்கூட்டிப் பிணைந்துவாழ மனிதர்காள்
வாழைகுலத் தொடரதாகி வளங்களையே தினந்தூவி
== வருடமென்ற பெயர்கொண்டே வாழ்த்திவாராய் பதினெட்டே!

... மீ.மணிகண்டன்
#மணிமீ
31/12/2017

எழுதியவர் : மீ.மணிகண்டன் (1-Jan-18, 4:48 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 1824

மேலே