அழகாகட்டும் புத்தாண்டு

புத்தாண்டு இரவு

சிறு மிட்டாயொன்றை
சிரிப்போடு பறித்திட
குட்டி கைநீட்டி
குறு குறுவென
காத்திருக்கும் ஒரு
குழுந்தையையை போல
மனசு காத்திருக்கிறது
மலரும் புத்தாண்டிற்கு


எப்போதும் போல
எந்த வருடத்தின்
கடைசிநாள் மட்டும்
கடவுளுக்கு தானென்று
கண்டிப்பாய் ஒதுக்கி
பரம் பொருளுக்கு
பாடி முடித்திருப்போம்
நன்றி பாடல்
நிச்சமாய் நாம்

நன்றியோடு மட்டும்
நிறுத்தி விடாமல்
நாசூக்காக சொல்லி
வைப்போம் அடுத்த
வருடமும் இதுபோல
கஷ்டப்படுத்தி விடாதே
கடவுளே என்று

சாய்ந்து கொண்டு
சாவகாசமாய் அசைபோட்டு
சிலிர்த்து கொள்ள
சில நினைவுகளும்
சில்லென இருக்க
சிறகடிக்கும் பறவையாய்
சிரித்து கொள்ளும்
சின்ன மனசு

இப்படி மட்டும்
இருக்க வேண்டும்
இது போன்றே
எல்லா சந்தோஷமும்
எல்லா நாட்களும்
என்னிடம் வந்து
என்வீட்டு ஜன்னல்
எட்டிப்பார்க்க வேண்டும்
என ஆசைப்பட்டுக்கொள்ளும்
எல்லோர் மனசும்

இப்படி தான்
இருக்க வேண்டும்
அப்படி எல்லாம்
இருக்க கூடாது
இது செய்ய
வேண்டும்
அது செய்ய
கூடாது என்று
தப்பாமல் தான்
கனக்குப் போடும்
தறிகெட்ட மனசு

போன வருடம்
எடுத்த உறுதிமொழி
கொஞ்சம் நிறைவேற்றி
நெறய நிறைவேற்றாமலே
நிச்சயம் ஓடிவிடும்
டிக் டிக் கடிகாரமாய்
டிசம்பர் இறுதிநாளில்


நிறைய சந்தோசம்
நிறைய ஆசைகள்
நிறைய கனவுகள்
நிறைய எண்ணங்கள் என
நிழலுக்கு விடைகொடுத்து
நிஜமென ஆரம்பித்தது
புத்தாண்டு இரவு
டிக் டிக்
மணி பனிரெண்டு
தக் தக் என
மனசு குதித்தது
ட்ரிங் ட்ரிங்
விரல் அழுத்தியது
ஹே ஹாப்பி
நியூ இயர்
நாலா பக்கமும்
ஒலித்து கொண்டிருக்குது
இந்த சத்தம்
இப்போது நான்
உங்களுக்கும்
ஹாப்பி நியூயர்

புத்தாண்டு வாழ்த்துக்கள்
பனித்துளியில் சிலிர்த்து
படும்வெயிலில் சினந்து
மகிழ்ச்சியில் மலர்ந்து
மனமுடைகையில் வாடி
பலகாலம் கடத்தியாயிற்று
கண்ணுக்கு தெரியா
கடவுளையும்
கண்ணுக்கு தெரியா
தன்னிம்பிக்கையும்
கெட்டியாக பிடித்துக்கொண்டு
கண்ணுக்கு தெரியும்
சக மனிதனை
நம்மைப்போல
நேசித்து வாழ
நித்தமும் நீளும்
மகிழ்ச்சி எப்பக்கமும்
அன்பில் அழகாகட்டும்
ஆண்டின் முதல்நாளும்
அடுத்து வரப்போகும்
அத்தனை நாட்களும் !

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (1-Jan-18, 6:26 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 4787

மேலே