கஜவதனா கருணா சதனா – ஸ்ரீரஞ்சனி

பாபனாசம் சிவன் எழுதிய விநாயகனைத் துதிக்கும் பிரபலமான ‘கஜவதனா கருணா சதனா’ என்ற பாடல் பல பிரபல வித்வான்கள் பாடுவதையும், நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின் போன்ற வாத்தியங்களிலும் வாசிப்பதையும், நடன நிகழ்ச்சிகளிலும் கேட்டும் கண்டும் ரசிக்கலாம். யு ட்யூபிலும் காணலாம்.

பல்லவி

கஜவதனா
கருணா சதனா
சங்கர பாலா
லம்போதர சுந்தர

அனுபல்லவி

அஜனமரேந்த்ரனும்
முனிவரும் பணியும்
பங்கஜ சரணா
சரணம் சரணம் ஸ்ரீ

சரணம்

நீயே மூவுலகிற்(கு) ஆதாரம்
நீயே சிவாகம மந்த்ர ஸாரம்
நீயே வாழ்வின் என்
ஜீவாதாரம்
நீ அருள்வாய்
சுமுகா ஓம்கார

வலைத்தளத்தில் MS Subbulakshmi- Gajavadhana-Sriranjani-Adi-Papanasam Sivan Subbulakshmi- Gajavadhana-Sriranjani-Adi-Papanasam Sivan என்று பதிவு செய்து குரலிசைக் கலைஞர் M.S.சுப்புலட்சுமி பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-18, 10:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 674

சிறந்த கட்டுரைகள்

மேலே