ஏடு முதல் எந்திரன் வரை

இக் கவிதை உயிர் வருக்கத்தில் (அ முதல் ஔ வரை) அமைந்த, என் சிற்றறிவுக்கு எட்டிய, “அன்றும் இன்றும்” வகையிலான ஒப்பீடு.

அன்னம் விடுதூது அன்பு காதலர்க்குள்
அண்ட சராசரமும் கை அகலத்திற்குள்
ஆந்தையாரும் காக்கையாரும் பாடலாக்கினர்
ஆந்தையரும் காக்கையரும் பாடலாகினர்
இயற்கையோடு இணக்கம் அன்று.
இணையத்தோடு துவக்கம் இன்று.
ஈரமும் வீரமும் தமிழ்மரபுக்கு மாட்சி
ஈழமே தமிழ் ஈனத்திற்கு சாட்சி
உழவும் உணவும் மிகுந்த தன்று
உலகமயமாக்கலால் அவை மெலிந்ததின்று
ஊருக்கு பெருமை அவர்களால்
ஊழலுக்கு பெருமை இவர்களால்
எத்திறனும் எடுத்தாள்வது அரிது
எந்திரனும் எண்ணுவது எளிது
ஏர்வாயில் வெற்றி கண்டானன்று
Airway-ல் வெற்றி கொண்டானின்று
ஐம்புலங்களை அடக்கி ஆன்மீகம் வளர்த்தனர்
ஐம்பொறிகளை முடுக்கி அறிவியல் படைத்தனர்
ஒருவனுக்கு ஒருத்தி அக்காலம்
ஒருவரே மேல் இக்காலம்
ஓங்கிய வளங்கள் அன்று
ஒடுங்கிய மனங்கள் இன்று
ஔவையும் வள்ளுவமும் வாழ்க்கை நெறிகளாயின
ஔடதமே வாழுவதற்கு வழிகளாயின.

சில கடின சொற்களுக்கான பொருள் :
ஆந்தையாரும் – பிசிராந்தையார்
காக்கையாரும் – காக்கை பாடினியார்
ஆந்தையரும், காக்கையரும் – பறவையினம்
ஔடதம் – மருந்து

எழுதியவர் : Gaya3 (2-Aug-11, 7:59 pm)
சேர்த்தது : Gaya3
பார்வை : 406

மேலே