அவளின் பரிசு

இன்று மாலை சந்திக்க வேண்டும் என்றேன்,சரி
என்றாய்.
உண்டா?இல்லையா?என்ற
முடிவை அறிந்துகொள்ள
தீர்க்கமானேன்.
உண்டு என்றால் ஒரு பரிசு
இல்லையென்றாலும் பரிசு
வேண்டுமென்றே தாமதமாக
சென்றேன்
கோபம் ஏதும் இல்லாது
புன்னகையோடு
வரவேற்றாள்.
வரச் சொன்னதற்கான காரணம்
என்ன?என்றாள்
ஒரு எண்ணம் மனதை
குழப்பிக்கொண்டிருக்கிறது
அதற்கான தீர்வு உன்னிடம்
உள்ளதென்றேன்.
என் முகத்திற்கு நேராக
அவளது கைகளில் பரிசு
இல்லை என்ற பதிலை
தாங்கிக் கொண்டு....

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (3-Jan-18, 3:36 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : avalin parisu
பார்வை : 118

மேலே