என்னவளின் அழகு
நிலவில்லா வானம் கருத்துவிட காரணம் புரிந்து கொண்டேன்
என்னவள் விழிமூடி தூங்குகிறாள் என்று
நீர் இல்ல குளம் ஒன்றில் மீன் வாழ்ந்து காணலியே அன்று
இன்றோ இரு மீன்கள் நீந்த வியந்து பார்த்து புரிந்துகொண்டேன் உன் விழியென
அந்தோ பரிதாபம் ஏன் இந்த அருவி இன்று ஆர்பரிக்கவில்லை
திகைத்துபோனேன் என்னவளின் மவுனமே காரணம் என அறிந்து
அக்காரம் சேர்த்து சுவைத்த சுவையறிந்தேன் பொங்கலிலே
அச்சுவையோ மெய்மறந்தேன் என்னவளின் பேச்சிலே
அக்கினிக்கட்டு ஒன்றை செய்துவிடுகிறாய்
என் மனதில் வடு என்றும் இல்லாவன்னம்
இரண்டகம் அர்த்தம் அறிந்தேன்
என்னவள் உன் புன்னகையின் அழகிலே
பொற்கவசம் அணிந்து உன் முன் நின்றும் உடைந்து விடுகிறது
என் இதயம் என்னவளின் அழகோடு போரிடமுடியாது
என் வாலிப பருவத்தையும் அசோச பருவமாய் மாற்ற விழைகிறேன்
என்னவள் உன் கொஞ்சலில் கொஞ்சம் இன்புற