என்னுயிர்த் தோழி

பள்ளியில் பக்கம் அமர்ந்து
பழக்கத்தில் பக்கம் வந்து
நெருக்கத்தில் ஆழம் எடுத்து
பிரிவில் பிணைக்கப் பட்டு
சரிவில் தோள்சாய கற்று
உள்ளுணர்வில் உந்தப் பெற்று
உயர்வில் உற்சாகமுற்று
கலக்கத்தில் கண்ணீர் விட்டு
கால இயக்கத்தில் கருத்தொற்றி
வியத்தகு நண்பர்கள் ஆனோம்.

எழுதியவர் : Gaya3 (2-Aug-11, 8:17 pm)
சேர்த்தது : Gaya3
பார்வை : 879

மேலே