தொடர்பு எல்லைக்கு அப்பால்

ராஜு மணி பத்து பஸ்ஸ்டாண்ட் உள்ளே போ கும்பலா இருக்க பஸ் பாத்து எரிக்கோ பேகை வச்சிட்டு உக்காரு நான் போன் பன்னபிறகு இறங்கி போயிடு.

சார், வேண்டாம் சார் பயமா இருக்கு இதுவரைக்கும் இந்தமாறி பன்னதில்ல.வேற வேலை எதாவது சொல்லுங்க.

டேய் , பத்துலச்சம் பணம் வேணும்னா பன்னு ,இல்ல நான் வேற ஆளை வச்சி பாத்துக்கிறேன் என்றான் நாதுராம்.

சற்றே யோசித்த ராஜீ சரி சார் போறேன், எனக்கு பணம் என்றான்.

நீ யோசிக்காம பண்ணியிருந்த உடனே பணம் தந்திருப்பேன்.காரியத்தை முடிச்சிட்டு வா தரேன்.இந்தா என்று கருப்பு பேகை நீட்டினான்.

வாங்கி கொண்ட ராஜு, சார் என் பேக் டிக்கியில் இருக்கு எடுக்கணும் என்றான்.

பக்கத்திலிருந்த பங்கஜ் நோக்கி பேகை எடுத்துக்கொடு என்று சைகை செய்தான் நாதுராம்.

டிக்கியை திறந்து பேகை எடுக்கும் போது இன்னோரு கருப்பு பேக் இருந்தது அந்த பேகையும் கீழே எடுத்து வைத்துவிட்டு ராஜீ பேகை எடுத்து இந்த என்று பங்கஜ் நீட்டினான்.

ராஜீ தவறுதலாக உள்ளேயிருந்து எடுத்த கருப்பு பேகை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
பங்கஜ் கீழேயிருந்த மற்ற பேகுடன் கருப்பு பேகையும் டிக்கியில் வைத்தான்.

ராஜு பஸ்சில் ஏறி அமர்ந்தான்.

இங்கே காரில் நாதுராம் பங்கஜ்யை கூப்பிட்டான் ,டேய் டிக்கியில் இன்னொரு கருப்பு பேக் இருக்கும் அதை எடுத்துக்கிட்டு போய் ராஜுகிட்டா பேக் மாறிபோச்சுனு கொடுத்திட்டு 10.30 க்கு கிளம்பசொல்லிடு.

சார், புரியல என்றான் பங்கஜ்.

டேய், இதுலதான் பாம் இருக்கு,நான் கொடுத்த பேகுல பணம் இருக்கு.அவன் கரெக்ட்டா பஸ்ல போய் உக்காரனா பாத்திட்டு கொடுக்கதான் இந்த ஏற்பாடு போ .

சரி சார் பாம் டைம் 10.15 தானே?

அவனும் போய் சேரட்டும் பயந்தாங்கோலி நாளைக்கு நம்மையும் கட்டிகொடுத்திடுவான் என்றான் நாதுராம்.

பேகை மாற்றிக்கொடுத்துவிட்டு வந்துவிட்டான் பங்கஜ்.

மணி சரியாக 10.30 ராஜு பஸ்சை விட்டு இறங்கிவிட்டான்.
நாதுராம்க்கு ராஜு போன் செய்ய போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் எரிந்துகொண்டுயிருந்தது.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (4-Jan-18, 12:51 pm)
பார்வை : 303

மேலே