மண்ணோடு கலந்த வாழ்க்கை

மண்ணோடு கலந்த நம் வாழ்க்கை நினைவலையில் ஒருமுறை மிதக்க விடுவோம்

மேற்கு மலை அடிவாரம்
தமிழ் பிறந்த தென்னாடு

வற்றா ஜீவ நதிபோல்
வளங்கொழிக்கும் சில ஆறு

முழு ஆண்டும் தென்றல் காற்று
தாகமில்லா நீரின் ஊற்று

பஞ்சம் இங்கு பார்த்ததில்லை
வஞ்சம் என்ற ஒன்றே இல்லை

முப்போகம் விழைந்து நிற்கும்
கதிர்,மணி சுமையால் சாய்ந்து நிற்கும்

ஊர் முழுதும் பச்சை நிறம்
என்ன ஒரு வித்தை நிலம்

ரெட்ட மாட்டு வண்டி பூட்டி
மணியோசை விட்டு நடக்க

காெட்டு மேளம் தட்டுபவனும்
தாேத்துத்தான் போயிட்டான்

கேணியிலே நீர் இரைச்சு
கழனியிலே பாச்சி வந்தோம்

ஊருக்குப் பல குளத்த வெட்டி
பருவமழை சேர்த்து வந்தோம்

பொங்கிவரும் பரணி நீர
பக்குவமாய் காவாய் விட்டோம்

ஊறவைச்ச விதநெல்ல
முழுவதுமாய் தூவிவிட்டோம்

அது தளிர் விட்டு எழுகையில
மேனியெல்லா சிலிர்க்குதம்மா

சீரி வரும் காளையினை
பக்குவமாய் பாத்து வந்தோம்

கொம்பு தனை சீவிவிட்டு
நெஞ்சு நிமிர்க்க எதிரில் நின்றாேம்

வீரத்தோடு பாசம் கலந்து
காளையாேடு ஆடிவந்தோம்

குடும்பம் ஒன்னும் சின்னதில்லை
பட்டியலும் நீளுமம்மா

பாசமுள்ள ஐந்தறிவும்
எங்க வீட்டு ஜீவனம்மா

ஒருபடியில் வித்தெடுத்து
கலசத்தில காெட்டி வைச்சாேம்

பஞ்சம் ஏதும் வந்ததுன்னா
எடுத்து அதை விதைக்க வச்சாேம்

கேப்பை,கம்பு கூழ் குடித்து
சதம் வயதை தான்டி நின்றோம்

ஆறடியில்  கம்பெடுத்து
அசுர வேகம் காட்டிடுவோம்

அன்றிருந்த என்னாடு
இப்ப மாறிப்போனதம்மா

மருந்த உணவாக்கிட்டு
மந்த வாழ்க்கை வாழுதம்மா

எழுதியவர் : (5-Jan-18, 9:49 pm)
சேர்த்தது : Abdul Hameed
பார்வை : 71

மேலே