சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 37 எந்நடு ஜூதுநோ – கலாவதி ராகம்

'கலாவதி' ராகத்தில் அமைந்த 'எந்நடு ஜூதுநோ' என்ற பாடலின் பொருளும், பாடலும் கீழே தருகிறேன்.

பொருளுரை:

ஆதிசேடன் மீது சயனித்தவனே! பக்தரைக் காப்பவனே! சூரிய குலத் திலகனே! பூர்ன சந்திரனை ஒத்த உன் திருமுகத்தை என்று காண்பேன்?

சீதா தேவி, லக்‌ஷ்மணன், பரதன், சத்துருக்கினன், சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உன் கருணையை வேறு வேறாக வருணிக்கவும், அவர்களை ஆதரவுடன் அழைத்து அளவளாவவும் உன் திருமுகத்தை (என்று காண்பேன்?)

பாடல்:

பல்லவி:

எந்நடு ஜூதுநோ
இநகுல திலக நிந் (நெ)

அநுபல்லவி:

பந்நக சயந ப க்தஜநாவந
புந்நம சந்து ருநிபோ லுமுக முநு (எ)

சரணம்:

தரணிஜ சௌமித்ரி ப ர தபுரிக் நவா
நரயூத பதிவருடா ஞ்ஜ நேயுடு
கருணநு வொகரி கொகரு வர்ணிம்பநா
த ரணநு பி லிசே நிநு த்யாக ராஜார்சித (எ)

யு ட்யூபில் Sandeep Narayan 01 ennaDu jUtunO kalAvati என்று பதிந்து சந்தீப் நாராயணன் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Ennadu Jutuno_raga Kalavati என்று பதிந்து M. பாலமுரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Thyagaraja Kriti-ennadu-jUtuno--kalAvati—Adi என்று பதிந்து B.V.ராமன் – B.V.லக்ஷ்மணன் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-18, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே