காா்மேக காதல்

காவோி கரையின் மரத்தைக் கண்டு
காா்மேகம் காதல் கொள்ளும்
கூந்தல் போன்ற கிளையில்
குடி கொள்ள வான்மேகம் தாண்டி வரும்
வழிநடையில் ஆசை அள்ளிக் கொள்ள
விழி துளி மகிழ்வின் எல்லையைத் தேடும்
காதல் காற்று எங்கும் வீசிட
காத்திருந்த மின்னலொளி மௌனத்தைக் கலைக்கும்
தணியாத தாகத்தில் தவிக்கும் நிலமகளை
தாய்மைக் கண்ணால் கண்டிடக் கூறும்
குவிந்திடும் ஆசைக் காதல்
நொறுங்கிடும் வருத்தத்தில்
நொடிப் பொழுதில் மரம் சேரும் மழைத்துளி
மறுநிமிடம் மண்ணைச் சேரும்
- சஜூ