அரசு பேருந்துகளும் அப்பாவி பயணிகளும்

அரசு பேருந்துகளும் அப்பாவி பயணிகளும்


அரசு பேருந்துகளும் அப்பாவி பயணிகளும்

தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசு பேருந்துகள் ஓடினாலும் வேலை நிறுத்தம் செய்தாலும் அப்பாவி பயணிகள் அவதி படுகின்றனர்

அரசு பேருந்துகள் ஓடும் போது

இயல்பாக அரசு பேருந்துகள் ஓடும் போதும் பயணிகள் படும் அவதிகள்

[] நடத்துனர் பயணியரை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை அதுவும் பயணக்கட்டணம் போக மீதி சில்லறை கேட்கும் பயணிகள்

[2 ] குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தும்படி கூறும் பயணிகள்

[3 ] சில்லறை இன்றி நூறு ரூபாய் ஐநூறு ரூபாய் கொடுக்கும் பயணிகள்

இவர்களை நடத்துனர்கள் நடத்தும் விதம் மிக மிக மோசமாக இருக்கும்

இதுமட்டுமன்றி அரசு பேருந்துகளில் ஏறி அமர்ந்த பயணியரை தனியார் பேருந்து முதலாளிகள் கொடுக்கும் காசுக்கு ஆசை பட்டு இறக்கு அந்த பேருந்தில் புளிமூட்டைகளோடு புளிமூட்டையாய் ஏற்றிவிடும் தன்மை
இவை எல்லாம் அரசு பேருந்துகள் ஓடினால் பயணியர் அனுபவிக்கின்றனர்

வேலை நிறுத்தத்தின் போது

அரசு பேருந்துகள் வேலை நிறுத்தத்தின் போது நடத்துனர்களும் ஓட்டுநர்களும் பயணியரை அந்த அந்த இடத்தில் இறக்கிவிடுவதும் பயணியரை பரிதவிக்க விடுவதும் வயதானவர்கள் பெண்கள் இவர்கள் யாரும் இவர்களுக்கு விதி விலக்கல்ல

நாட் கணக்கில் வாரக்கணக்கில் வேலை நிறுத்தம் செய்வதும் உயர் நீதி மன்றம் எச்சரிக்கையை காற்றில் பறக்க விடுவதும் தொழிற்சங்க தலைவர்கள் நீதிமன்றத்தில் தங்கள் தவறை நியாயப்படுத்த முயல்வதும் அரசுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியதாக கூறுவதும்
நடைபெறுகிறது

மக்களுக்கல்லவா இவர்கள் தெரியப்படுத்திருக்கவேண்டும் செய்தி தாள்கள் மூலமாக இவர்களின் வேலை நிறுத்தத்தை முன் கூட்டி தெரிய படுத்தி இருந்தால் இவர்களின் வேலை நிறுத்தத்தின் முதல் நாள் பயணியர் அனுபவித்த துன்பங்கள் இடர்கள் தவிர்க்கப்பட்டிருக்கும் ஆனால் இவர்கள் திடீர் திடீர் என வேலை நிறுத்தம் செய்வதும் பயணியரை அலற விடுவதும் இவர்களின் வாடிக்கையாகி போய் விட்டது
இவர்கள் பணி அரசு பணி என்பதாலும் இவர்களின் தொழிற் சங்கத்தின் வலிமையாலும் இவர்கள் பொது மக்கள் ஆகிய பயணியரை கலங்க வைக்கின்றனர் இவை எத்தனை காலம் இப்படி செய்ய முடியும் ?

எப்படி பொது மக்களை [ நுகர்வோரை ] அலட்சிய படுத்திய B S N L [அரசு தொலை பேசி இன்று அதே நுகர்வோரால் தூக்கி எறியப்பட்டு மதிப்பிழந்து வலுவிழந்து போனதோ அது போல் ஏர்டெல், ஏர் செல் போல தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் போட்டியும் அதே போல் இன்னும் சிறப்பான மலிவான தரை வழி போக்குவரத்து சாதனங்கள் அதிகரிக்கும் போது இவர்களும் இதே பொது மக்களால் [பயணியரால்] புறக்கணிக்கப்படுவர் அன்று அரசு போக்குவரத்து பயணியரை தேடி தேடி சேவை செய்யும் காலமும் வரும்

இவர்களை நிச்சயம் காலம் தண்டிக்கும் அது வரை நம்முடைய கோபத்தை பொறுமை என்ற போர்வையால் மூடி வைத்து காத்திருப்போம்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (8-Jan-18, 7:57 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 375

சிறந்த கட்டுரைகள்

மேலே