கவலை

உருவான நாள் முதல்
உயிர் பிரியும் நாள் வரை
நீங்காது உன்னை நான்
நிழலெனதொடர்வேன்
உள்ளத்திலில் மட்டுமல்ல
உன் உணர்விலும் நான்
உறக்கத்தில் மட்டுமல்ல
செல்லும் இடமெங்கும் உன்னை
நான் சீர்குலைப்பேன்
வைர நெஞ்சத்தைக்கூட
வாளெடுத்து அறுக்காமல்
வார்த்தையால் அறுத்திடுவேன் உன்
வாழ்நாள் முடியும்வரை
கண்ணசைவிலே கல்நெஞ்சத்தையும்
கண்ணாடித்து ண்டென
கலர் கலராய் உடைத்திடுவவேண்
உனை நான் வென்றால்
முடிவு மரணம்
எனை நீ வென்றால்
முடிவு மணி மகுடம்
முயன்று பார்
மரணமா இல்லை மணிமகுடமா?
முடிவு உன்கையில்

எழுதியவர் : ஆர்.கருப்பசாமி (8-Jan-18, 8:23 pm)
Tanglish : kavalai
பார்வை : 83

மேலே