பழகியதில் கிடைத்தது

பழகியதில் கிடைத்தது :

நாளிதழை நம் வீட்டில் நாளும் எரிபவப்பவனுக்கு
அதை நாவு சுவைக்கும் ருசி அறியாது
எட்ட நின்று பத்தடி தூக்கி எரிந்து விட்டு செல்வான்
படிப்பவனோ பக்குவம் பார்த்து ஒட்டிய மண்ணை
அணிந்த உடையில் தூசு துடைத்து முதல் தாளில் இருந்து
முடியும் கடைசி தாள் வரை மனமார நாவசைத்து
உண்டு களிப்பான் நல்ல செய்திகளை ....
மேலும் எறிந்தவனுக்கு கூலியும் கொடுப்பான் ....


இங்கு கவனிக்க வேண்டியது ......

நல்ல செய்தியை எவர் எப்படி எப்படி தூக்கி எரிந்தாலென்ன
நன்மை உணர்ந்து நாளிதழை போல வாசிப்போம்
அது எப்படி கிடைத்தாலும் பக்குவமாய் எடுத்து தூசு துடைத்து
வாசிப்போம் மேலும் ஏறிந்தவருக்கு கூலியாய் நன்றி உரைப்போம்

எழுதியவர் : ராஜேஷ் (9-Jan-18, 9:03 am)
பார்வை : 1029
மேலே